பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

முயன்றாே, தன் திருமணத்தை முடித்து வைக்கும் பெரும் பணியை நான் மேற்கொள்ளுதல் வேண்டும் என விரும்பு கிருள்” என உணர்ந்தாள். -

வீட்டிற்கு வந்திருக்கும் வேற்று வரைவினை மாற்றுதல் வேண்டும்; ஆளுல் அவ்வரைவிற்கான பேச்சு வீட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் அதை மாற்றுவது எவ்வாறு? இவள் காதல் உறவைச் செவிலியின் துணையால் தாய்க்கும், அவள் வழியாகத் தந்தைக்கும் அறிவித்தால், அவர்கள், இப்போது நிகழ்த்தும் மணப்பேச்சைக் கைவிட்டு இவள் விரும்பும் அவ்விளைஞனுக்கு மணம் செய்து தர இசை வரோ என்றால், அதை இந்நிலையில் உறுதியாக நம்புவதற் கில்லை. தந்தையும், தமையன்மாரும் சினம் மிக்கவர்; தம் குடியில் பிறந்தவள், தம்மை அறியாது, தான் விரும்பும் ஒருவனை மணக்க மனம் இசைந்து விட்டாள் எனக் கேட்பின் கடும் கோபம் கொள்வர். இவள் கருத்திற்கு மாருத இவளைத் தாம் விரும்பும் பிறன் ஒர் இளைஞனுக்கே மணம் செய்து விடுவதும் செய்வர். ஆகவே, வெளியார் வந்து மணப் பேச் சுப் பேசிக் கொண்டிருக்கும் இந்நிலையில், இவள் காதலை அவருக்கு அறிவித்து அவர் ஒப்புதல் பெற்று இவள் திருமணத்தை முடித்தல் இயலாது, மேலும், அவர் கோபத் தின் கொடுமை, “இவள் நம் கருத்தறிந்து தன் காதலனேடு அவனுர்க்குச் சென்று விடவும் துணிவள்; ஆகவே, அவள் அவ்வாறு செல்லத் துணிவதற்கு முன்பே, இத் திருமணத்தை முடித்து விடுதல் வேண்டும் எனத் துணிந்து துணிந்தவாறே விரைந்து முடிக்கவும் முனையும்; ஆகவே, இவள் ஈண்டிருக்கும் ஒவ்வொரு நாழிகையும் இவளுக்குக் கேடாய் முடியுமாதலின், இவள் இன்றே, தன் காதலகுேடு அவனுர்க்குச் சென்றுவிடல் வேண்டும் எனத் துணிந்தாள்.

துணிந்த தோழி, துயரமே உருவாய், உள்ளம் உடைந்து ஒய்ந்து கிடக்கும் அப்பெண்ணே அணுகினள். தோழி! நம் ஊர்க்கும் நம் காதலர் ஊரிக்கும் இடையே உள்ள வழி,