பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x

பெயர் பெற்றாேர் பன்னிருவர் பெயர்களையும், உரைநடிை யால் பெயர் பெற்றாேர் அறுவர் பெயர்களையும் அறியத்துணை புரிந்தது குறுந்தொகை. குறுந் தொகைக்கு இப் பெருமை ஒன்றே போதும்! -

பொருளிட்டும் பணிமேற்கொண்டு கடல் கடந்த நாடு சென்ற கணவன் வாராக் கவலையால், தன் இயற்கை நலம் எல்லாம் இழந்து நிற்கும் ஒரு பெண்ணின் நிலைக்கு, மக்கள் வழங்கா இடம் பார்த்தே வாழும் இயல்புடைய அணில்கள் மகிழ்ந்தாடும் முன்றில்களைக் கொண்ட வாழ்வோர் போகிய பாழுரை உவமை காட்டி, அணிலாடு முன்றிலார் எனும் அழகிய பெயர் பூண்ட புலவரை அறிவிப்பது குறுந்தொகை ஒன்றே.

வினை முடித்து மீளும் கணவன், சேனெடும் தொலைவில் உள்ள சிற்றுாரில், தன் வரவு நோக்கிக் காத்து நிற்கும் காதலியை அப்போதே அடையத் துடிக்கும் தன் நெஞ்சின் நிலை, வாராத மழை வந்து சென்றதாக, அவ்வீரம் புலர் வதற்கு முன்பே, தன் பெரு நிலம் அனைத்தையும் தன் ஒரே ஏரால் உழுதுவிடத் துடிக்கும் உழவன் உள்ளநிலைக்கு ஒப் பாகும் என்று கருதினன்’ எனப் பாடி, ஒரேர் உழவர் எனும் உய்ர் பெயர் பூண்ட ஒருவரை நமக்கு அறிவிப்பதும் குறுந் தொகையே. . .

இவைபோலும் பொருள் செறிந்த உவமைகளை ஆண்டு. அணிலாடு முன்றிலார் (செய்யுள் 41), ஓரேர் உழவர் (செ. 181), கயமஞர் (செ. 9), கல்பொரு சிறு நுரையார் (செய்யுள் 290), கவை மகளுர் (செ. 324), காலெறி கடிகையார் (செ. 267), குப்பைக்கோழியார் (செ. 805), கூவன் மைந்தனர் (செ. 224), செம்புலப் பெயல் நீரார் (செ. 40). மீனெறிதுண்டி லார் (செ. 54), விட்டகுதிரையர் (செ. 74), வில்லகவிரலினர் (செ. 970), எனும் அரிய பெயர் பெற்ற புலவர்களை, அழி யாப் பெரு நிலையில் இருத்த பெருந் துணை புரிகிறது குறுந் தொகை, - . 3. . . .