பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

அவள் இசைவு பெறக் கருதினன். அக் கருத்தோடு அவளே அணுகியவன், அணிகள் பல அணிந்து அழகில் மிக்குத் தோன்றும் அவளைப் பாராட்டினன்; அப்பாராட்டு, அவள் அன்றேபோல் என்றும் அப் பெரு வாழ்வில் வாழ வேண்டும்; அதற்குத் துணைபுரியும் பெரும் பொருள் ஈட்டுவரத்தான் போதல் வேண்டும் என்ற அவன் வேட்கையை வெளிப் படுத்துவது போல் தோன்றிற்று. அவ்வாறு பாராட்டிய வன், பெண்ணே! ஒரு கலைமான், தானும் தன் பிணையும் வயிருர உண்டு மகிழ்வதற்கு ஏற்ற ஓர் இடத்தைத் தேடிப் பிடித்தது. நீலச் சிறு மணிகளை நிரல்படக் கோத்து வரிசை வரிசையாக நால விட்டாற்போல், பசுமை மிகுதியால் கறுத்துத் தழைத்து வளர்ந்த அறுகம்புல் நிறைந்த அவ்விடத்தைக் கண்ணுற்றதும், தன் பிணையைக் கூட்டிக் கொண்டு ஆங்கு ஒடிந்று; அதளுேடு கூடி, அறுகை வயிருர உண்டது; உண்ட மகிழ்ச்சி மிகுதியால், இரண்டும் துள்ளித் துள்ளிக் குதிக்கத் தொடங்கின. அவ்வாறு மானி னம் மகிழ்ந்தாடும் ஒரு காடு நம் ஊரை அடுத்துளது’ எனக் கூறித் தன் கருத்தை ஒருவாறு வெளிப்படுத் தியவன், பெண்ணே! அக்காட்டைக் கண்டி எனக்குப் பொருள் ஈட்டி வந்து, உன்னேயும் மகிழ்வித்து, யானும் மகிழ வேண்டும் எனும் உணர்வு பிறந்தது; ஆகவே, காதலி! அக் காட்டைக் கடந்து போய்ப் பெரும் பொருள் சட்டி வரும் கருத்துடையேன் நான்; தான் சென்று வருங் காறும் வருந்தாது, ஆற்றியிருத்தல் உன்னல் ஆகுமோ?” என மெல்ல வினவிஞன்.

கணவன், தன்னை மகிழ்விக்க ஒரு காதற் காட்சியைக் காட்டுகிருன்; அக்காதற் காட்சியைக் கண்டவாறே மகிழ்ந்து சென்று வினைமுடித்து மீள்வோரின் காதல் வாழ்வைக் கூறுகிருன் என்ற நினைவால்,அவன் கூறுவன வற்றை ஆர்வத்தோடு கேட்டு வந்த அப்பெண், “நான் சென்று வருகிறேன்; அதுகாறும் ஆற்றியிருத்தல் உன்னல் ஆகுமோ?” எனக் கூறக்சேட் டவுடனே, அவள் தன்னை இ.ணர்ந்து கொண்டிாள். கணவன், தன்னைத் தனியே விடுத்