உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1st

என்ற அடை கொடுத்து, மனையுறை மகளிர் என வழங்கிய தாலும், தோழியின் உள்ளம் உரைக்க விரும்பிய உலகியல் உண்மைகளே அப்பெண் உணர்ந்துகொண்டாள். அதனல், கணவரி செல்லார்; கலங்கற்க என்ற சொல் கேட்டுக் கலக்கம் ஒழிந்த அவள் உள்ளம், தோழியின் உரைகளில் பொதிந்து கிடந்த உலகியல் உண்மைகளை உணர்ந்து கொண்டதால், பிரிவுத் துயர் தாங்கும் வன்மையும் பெற் றுத் திகழ்ந்தது. அதனல் அவன் போக, அவள் உள்ளம் விடை தந்தது. தன் கருத்து நிறைவேறக் கண்டு களித் தாள் தோழி. .

“வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என நமக்கு உரைத்தோரும் தாமே, x அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே.”

னிதோ? பெரும!

)

விேைமற் செல்ல வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்த உன் கணவன், மனேவியைப் பிரியாதிருக்க வேண் டிய இன்றியமையாமையினையும் உணர்ந்துள்ளான் ஆதலின் பிரியான்’ எனத் தேறுதல் உரைப்பாள் போல், கடமை கருதி வினேமேற் செல்வது கணவன் கடமை, மனேயற மாண்பு குறித்து மனையின்கண் இருத்தல் மனைவி கடமை, என உலகியல் உணர்த்தி அப்பெண்ணைத் தெளிவித்த தோழி ஆவ8ள விடுத்து இளைஞன்பால் சென்றாள்.

a குறுந்தொகை 135. பாலேபாடிய பெருங்கடுங்கோ. ஆடவர்ககு உயிர் வினையே என மாற்றுக, வாள் நுதல்ஒளிவீசும் நெற்றி, மனையுறை-மகளிர் என்ற அடைச்சிறப்பு உணர்க. அழாஅல்-அழுவதைக்கைவிடு; செலவு அழுங்குவர்; செலவு.பொருள்தேடிப் போவது அழுங்குவர்.கைவிடுவர்,

கு-10 .