பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

ாேம் கலங்கி நிற்கும் தோழிபால் சென்றாள்; தோழி! அவர் பிரிவால் என் மேனி பொலிவிழந்து போனது உண்மை; ஆளுல், தோழி! என் மேனி தான் அவ்வாறு துயர் உறுகிறதே யல்லது, என் உள்ளத்தில் சிறிதும் துயர் இல்;ை நல்லுணர்வு வாய்க்கப் பெற்ற என் உள்ளம், அவன் நட்பின் பெருமையை அவன் அன்பின் ஆழத்தை நன்கு அறிந்துள்ளது; என்மேனி, அவன் பிரிவால் பொலிவிழந்து பச ைபடர்ந்து போனது போல், அவன் நட்பு மங்காது, நம்மை மறவாது என்பதை அம்மனம் நன்கு அறிந்துளது; அதனுல் அது கலங் கிாது” எனக் கூறிக் காதலன் நட்பின் நலத்தை நாவாரப் பாராட் டிஞள்.

காதலன் நட்பைப் பாரட்டியதோடு அப்பெண்ணின் உள்ளம் அமைதியுற்றி லது; தோழியின் நாவை அடக்க அதுமட்டும் போதாது என உணர்ந்தாள். அதனல், பொருள் தேடிப்போன அவன் போக்கிற்குத் தன் உள்ளத்து இசைவும் உண்டு என்பதை அவள் உணருமாறு செய்தலும் வேண்டும் எனவும் உணர்ந்தாள். ஆனல், சிறிதுமுன் கணவன் பிரி வறிந்து கண்ணிர்விட்டுக் கணங்கி அழுதவளாதலின், அதை வெளிப்படையாக உரைக்கச் சிறிது தயங்கிளுள். அதனல் தன் உள்ளக் கருத்தை உரைக்க ஒரு வழியைத் தேடினள். காதலன் நாட்டுவளம் கூறுவதுபோல் தன் கருத்தினைக் கூறுதல் எளிதும் இனிமையுமாம் என உணர்ந்தாள். அதனுல் மீண்டும் தோழி பால் சென்றாள்; அவள் வேண்டாமுன்பே “தோழி! நம் தலைவனுக்குரிய நாடு எத்துணை வளமிக்க நாடு என்பதை நீ அறிவையோ’’ என வினவிவிட்டு, அதற்கு அவள் விடையேதும் தாராமுன், தானே மீண்டும் தொடங்கி, “தோழி! அவன் நாட்டில், மின்னியும் இடித்தும் பெரு மழை பெய்வதால். ஆங்குப் பாய்ந்தோடும் ஆறுகளின் இரு கரை களும் நிறைந்து வழியுமாறு வெள்ளம் பெருக்கெடுத்துே டக் கண்டவுடனே, அவ்வாறு களின் கரைவாழ் மயில்கள், தம் உள்ளத்தே களிப்பு மிகுந்து தம் தோகைகளை விரித்து ஆடி யும், தம் இனிய குரல் எடுத்துக் கூவியும் மகிழும்; அத்துணை வளம் மிகுந்தது அவன் நாடு,” என அவன்