பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18?

டிாள். அவள் உடல் நலம் குன்றத் தொடங்கிவிட்டது; ஒளி வீசி அழகு தந்த அவள் மேனி, பசலை படர்ந்து பாழுற் றது; அப்பெண்ணின் இத்திலே கண்டு தோழி பெரிதும் கலங்கி ள்ை. ‘இவளை இவ்வாறு கலங்க விடுத்துச் சென்ற அவன் கொடுமையை என்னென்பேன்” என்பன போல்வன கூறி இளைஞனைப் பழிக்க முனேந்தது அவள் உள்ளம். பழிக்கத் தலைப்பட்டது அவள் வாய்.

இளைஞனைப் பழித்துரைக்கும் தோழியின் வன் சொற்கள் அப்பெண்ணின் காதுகளிலும் சென்று பட்டன. உடனே அவள் போக்கில் ஒரு மாறுதல் இடம் பெற்றது. போன கணவன் எத்துணைதான் கொடியவனுயினும் அவன் என் கணவன்; அவனேப் பிறர் பழி கூறப் பார்த்திரேன்; பார்த் திருத்தல் பெண்மைக்கு அழகன்று’ என உணர்ந்தாள்; அவ் வாறு உணர்ந்தவள். அவனைத் தோழி பழிப்பது தன்ல்ை, அவனைப் பிறர் பழிக்கத்தானே காரணம் என்பதையும் உணர்ந்தாள், நாணினுள். காதலன் பிரிவைப் பொருது நான் கலங்கினேன்; என் கலக்கமும் கண்ணிரும் கண்டமை யால். அவற்றிற்குக் காரணமாயினன் அவன் எனக் கொண்டு, தோழி அவனைப் பழிக்கிருள். ஆகவே கணவனைப் பிறர் பழிக்க நானே காரணமாயினேன்; அந்தோ! கண வன் புசுழைக் காக்க வேண்டிய நானே அவன் பழி க்குக் காரண ம் ஆயினேனே! என்னே என் அறியாமை!’ என எண்ணிக் கலங்கினுள்.

சிறிது பொழுது சென்றது; அவள் சிந்தனை செயல் படத் தொடங்கி ம்று; அலங்கிப் பயன் இல்லை; இத்தகைய இழி நிலைக்கு இனியும் இடம் கொடுத்தல் கூடாது; அவன் பிரிவால் நான் படும் துயரைப் பிறர் உணரக் காட்டிக் கொள்ளுதல் கூடாது. அது மட்டும் போதாது; அவனைப் பழிப்பார் அறிந்து நாணுமாறு அவன் பெருமையை அவர்கள் முன் நானே பாராட்டவும் வேண்டும் எனத் துணிந்தாள். துணிற் தவள், பசல்ை படர்ந்து பாழுற்ற தன் உடல்நிலை கண்டு உள்