பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

போகாதிருப்பதே நன்றாம் என்ற தன் விருப்பத்தை வெளிப் படுத்தினுள்.

கண்ணி மருப்பின் அண்ணல் கல் ஏறு

செங்கோல் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப் புல் அரை உகாஅய் வரிநிழல் வதியும் இன்ன அரும் சுரம் இறத்தல் இனிதோ, பெரும! இன் துணைப் பிரிந்தே.” .

கணவன் நட்பு கருகாது :

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற குறள் நெறியை அறிந்தவன் அவ் விளைஞன். பொருள் ஈட்டிவரப் போகவேண்டும் என்ற எண்ணம் எழுந்த அந்நாள் முதலாக அவன் மனம் பட்ட பாட்டிகின அவனே அறிவான். போவது போகாதிருப்பது ஆகிய இரு நிலைகளாலும் நேரவிருக்கும் இன்பதுன்பங்களின் இயல்புகளே, எல்லாக் கண்கொண்டும் அளந்து நோக்கிய பின்னரே அவன் போகத்துணிந்தான். அவன் மேற்கொண்ட அம்முடிவு ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும்; அதனால் தோழி கூறிய அறிவுரை அவன் செவிகளுள் புகவில்லை. போக்கைக் கைவிடாது போய் விட்டான்.

காதலன் போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டாள் அப்பெண்; உணர்வும் உயிரும் இழந்தவள் போல் ஆகிவிட்

, குறுந்தொகை: 353 : செல்லூர்க் கொற்றன். கண்ணி - தலைமாலை, மருப்பு - கொம்பு; அன்னல் - சிறந்த ஏறு . எருது வரைஆ - மலைப்பசு, கோல் - தண்டு; பதவு -அறுகம்புல்; வார்-நீண்ட குரல்-கொத்து, கறிக்கும்கடுத்துத் தின்னும்; வெய்துற்று - பெரு மூச்சுவிட்டு; புல் அரை - சிறிய அடிமரம் இறத்தல் - கடந்து ப்ோதல்,