பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

அவன் தன்மீது கொண்டுள்ள காதல் நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, ஆழ்கடலினும் ஆழம் உடைத்து என் பதை அறிந்த அவள் உள்ளம் பெரிதும் அலைப்புண்டது. அவன் தன் மீது கொண்டுள்ள பெருங்காதல், அவனைப், பொருள் தேடிப்போன முயற்சியை இடையே கைவிட்டு வறிதே மீளச்செய்துவிடுமோ என்ற அச்சம் அவள் உள்ளத் தில் குடி புகுந்துகொண்டது. அவ்வாறு மீண்டுவிட்டால் அவன் ஆண்மை என்னும்; அவன் கடமை என்னும் உலகம் அவனே எள்ளி நகைக்குமே; பிறர் பழிக்க வாழும் வாழ்வும் ஒரு வாழ்வாமா? பழியொடுபட்ட பெருவாழ்வு வாழ்வதினும் வாழ்விழந்து போதலே விழுமியதன்றாே? அவ்வாறு அவன் 1.ழியுடையளுதலே நான் எவ்வாறு தாங்கிக்கொள்வேன்; அதுவும் அவன் பழியுடையளுதற்கு, அவன் என்பால் கொண்ட காதலே காரணமாதலைக் கண்டும் நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்” என எண்ணி எண்ணித் துயர் உற்றாள்.

அவள் உள்ளம் படும் பாட்டினைத் தோழி உணர்ந்தாள். இளைஞன், அவன் மனைவிமீது கொண்டுள்ள காதவினும், கடமை மீது கொண்டுள்ள காதல் ஆற்றல் மிகுந்தது என் பதை அத்தோழி அறிந்திருந்தாள். அதனுல் ஆதைக்கூறி அவளைத் தேற்றத் துணிந்தாள். பெண்ணே! உன் கணவர் தமக்குரிய கடமை இது என்பதை நன்கு அறிந்தவர்; அறிந்து தோடு நில்லாது அக்கடமையைக் குறைவற நிறைவேற்று தல் வேண்டும் என்பதில் அசையா உறுதியும் உடையவர்; அம்மட்டோ! கடமையை உணர்ந்து, அதை நிறைவேற்றப் போவதற்கு முன்னர்த், தம் முயற்சிக்கு முட்டுக்கட்டை களாய் நின்று தடைசெய்யும் காதலின் ஆற்றல், கடந்து செல்லவேண்டிய காட்டு வழியின் கொடுமை, இவற்றாலாம் தடைகளைக் கடந்து போய்ப் பொருளிட்டிவரத் தமக்கு வேண்டிய உள் உரம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே அவர் வினேமேற் செல்லத் துணிந்தார்; ஆதலின், வினைக்காது, அவர் வறிதே மீளார்;ஒரோவொருகால், காதல் வெறி வெற்றிகொள்ள, கடமையை இடைவழியில் கைவிட்டு மீளக்கருதுவாராயின், அந்நிலையில், காதலால் மறைப்புண்டி