பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கார் அன்று; களைக உன் துயர்:

பொருள் தேடிப் போன இளைஞன், மீண்டுவரக் குறித்த காலம் கார்காலமாம் என்பதைத் தோழி அறிவாள்; அக்கார் காலமும் வந்துவிட்டது; கார்காலத்துக் கருமுகில்களைக் கண்டு மயில்கள் தம் தோகைகளை விரித்து ஆங்காங்கே ஆடி மகிழ்ந்தன. கார் காலத்தில் மலரும் இயல்புடைய பிடா மலர்கள் மலர்ந்து மணம் வீசின. மயில்களின் நடனத்தைக் கண்டு, பிடாவின் நறுமணத்தை நுகர்ந்து இது கார்காலம் என்பதை அப்பெண் அறிந்துகொண்டாள். அதனுல் அப் பருவத் தொடக்கத்தில் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்ற கணவன்வாராமை கண்டு வருந்தினள். அவன் வந்து இன்பம் தந்திலனே’ எனும் ஏக்கத்தினும், புதிய ஒரு துயரம் அவளைப் பற்றிக் கொண்டது. வழங்கிய வாக்குறுதியினின்றும் வழுவி ஞரைத் தெய்வம் வருத்தும் என்பதில் ஆசையா நம்பிக்கை உடையவள் அப்பெண்; கணவன் கார்காலத்தில் வந்துவிடு வேன்; கலங்காதே’ என உறுதி உரைத்துச் சென்றிருந்தான். அக்கார்காலம் வந்து விட்டது; அவன் வந்திலன்; அவன் வாக்குப் பொய்த்துவிட்டது; இப்பிழையால் அவனுக்கு யாதுகேடு நேருமோ என்ற எண்ணமே அவளைப் பெரிதும் ஆலைக்கழித்தது.

இதை உணர்ந்தாள் அவள் தோழி; இந்நிலையில் கணவன் உரை பொய்யாகவில்லை; ஆகவே அவனுக்கு எவ் விதக் கேடும் நேராது என்பதை அவள் உள்ளம் உணரும் வகையில் காட்டிலைல்லது அவள் துயர் குறையாது என் பதை உணர்ந்தாள்; ஆளுல், அதற்கு அவளால் என்ன செய்யமுடியும். காரிகாலம் தொடங்கிவிட்டது என்பதிலோ, கணவன் வாக்குப் பொய்த்துவிட்டது என்பதிலோ சிறிதும் ஐயம் இல்லை; ஆயினும் அவள் மனம் சோர்ந்துவிடவில்லை. அவன் சொல் பொய்யாகவில்லை என்பதை எவ்வாறு நிலை நாட்டுவது எனச் சிந்திக்கத் தொடங்கிளுள்; சிந்தனையின் முடிவில் “துன்பத்தில் பாவம் இல்லை; துணிந்து ஒரு பொய் கூறு பொய்ம்மையும் வாய்மையிடத்த, புரை தீர்ந்த நன்மை