பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

வால், அவள் தன் வருகையை எதிர் நோக்கி நிற்கும் நிலை; வாராமையால் வந்த ஏமாற்றம் அவளைப் படுத்தும்பாடு; இவற்றை எண்ணிப் பரீர்த்தான்; அவன் உள்ளம் நெகிழ்ந் தி.தி. காற்று இயக்க மெல்ல ஆடி அசையும் மூங்கிலேப் போன்ற வடிவும் வனப்பும் வாய்ந்த அவள் தோள்கள், மான் போல் மருண்டு மருண்டு நோக்கும் கள்ளமில்லாக் கண்கள் இவை அவன் கண் முன் தோன்றிக் களி நடம் புரிந்தன: காதல் உணர்வு ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கிவிட்டது; அவள் அழகின் திருவுருவைக் கண்டு களித்த அவன், குறித்த காலம் கடந்து போகவும் காதலன் வந்திலனே என்ற எண்ணம் வருத்த இருவிழியும் நீர் சோர நிற்கும் நிலையினை நினைந்துகொண்டான்; அவள் உள்ளம் எத்துணை மென்மை வாய்ந்தது என்பதை உணர்த்தவன் அவன்; துயர் பெருகின் அதை அவளால் தாங்கிக் கொள்வது இயலாது. அவள் உயிரிழந்து போயினும் போவாள் என உணர்த்திற்று அவன் உள்ளம்; அதற்குமேல் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்றே ஊர் அடைதல்வேண்டும்; அவளை இப்பொழுதே கண்டு கண்ணிரைத் துடைத்தல்வேண்டும் எனத் துடித்தான்; அத்துடிப்பு மிகுதியால் தான் எங்கிருக்கிருன்; அவள் எங்கிருக் கிருள்; தனக்கும் அவளுக்கும் இடையே உள்ள வழியின் தொலைவு எவ்வளவு என்ற எதையும் எண்ணிப்பாராத அவன் அவளிருக்கும் ஊ. நோக்கிப் புறப்படத் தொடங்கியதும், தன் உள்ளம் விரையினும், அவளை விரைவில் அடைதல் இயலாது என்பதை உணர்ந்தான். அவள் இருக்கும் ஊர் நனி மிகச் சேய்மைக்கண் உளது; செல்லும் வழியும் தேர் விரைந்து ஒடுமாறு செம்மைப்பட்டிருக்கவில்லை. அது காடு களையும் மலைகளேயும் காட்டாறுகளையும் இடையிடையே கொண்டு கடத்தற்கு அருமை வாய்ந்து காட்சி அளிக்கிறது: நேரிய வழியே யாயினும் நெடுநாட்கள் கழிந்த பின்னரே சென்று சேரும் சேய்மைக் கண் உள்ள அவ்வூரை, இத்தகைய கொடுமையும் அருமையும் வாய்ந்த காட்டு வழியை, நனி மிகக குறுகிய காலத்தில் கடந்து, தான் நினைக்குமாறு விரைவில் அடைதல் இயலாது என்பதை அறிந்தான்,