பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

தாக வேண்டுமே; என்னிடம் இருப்பது இவ்வொரு ஏரி தானே; இதைக்கொண்டு இவ்வளவு நிலத்தையும் எப்போது உழுது முடிப்பேன்? நான் உழுது ஏறும்வரை ஈரம்காத்திராது போலத் தோன்றுகிறதே அந்தோ, என் செய்வேன்’ என அவன் உள்ளம் துடிக்கும் துடிப்பு, அவன் கைத் துடிப்பில் காணப்பட்டது; ‘பெய்யாத மழை பெய்துளது; இனிப் பெய்யும் என எதிர்நோக்குவது இயலாது; என்னிடம் உள்ளது ஒரு ஏர் உழவேண்டிய நிலமோ பெரிது உழக் கூடிய காலமே குறைவு என்றாலும் உழுது முடித்தாக வேண்டும்’ என உள்ளம் துடிக்க, அவன் கைகள் ஏரில் பூட்டிய இரு எருதுகளையும் ஒட்டு ஒட்டென விரைந்தோட் டிக்கொண்டிருந்தன.

காதலியைக் காணவேண்டும்; அதுவும் இன்றே காண வேண்டும்; அாலம் கடந்தால் அவளே உயிரோடு காண்டதே இயலாதுபோம்; கடத்தற்கரிய இவ்வழியை. மிக நீண்டு கிடக்கும் இந்நீள்வழியைக் கடந்து சென்று காணவேண்டும்; இப்பெருவழியை என் தேர் எப்படிக் கடக்குமோ அறியேன். இப்போதே கடந்து சென்று காதலியைக் காணவேண்டும்” எனத் துடிக்கும் தன் நெஞ்சின் துடிப்பிற்கும் எல்லா நிலத் தையும் உழுதாக வேண்டும் ஈரம் புலர்வதற்குமுன் இன்றே உழுதாக வேண்டும்; என்னிடம் உள்ளது ஒரு ஏரேயாயினும் உழுது முடித்தல் வேண்டும்” எனத் துடிக்கும் ஒரேர் உழவ னின் உள்ளத் துடிப்பிற்கும் உள்ள ஒருமைப்பாட்டினே உணர்ந்தான்; அவ்வுள்ளத்தின் துடிப்புக் கண்டு, அதுபடும் துயர்கண்டு அவன் கலங்கின்ை செயலிழந்து வருந்தினன்; செய்வது அறியமாட்டாது துன்புற்றுத் துடித்தான்.

ஆடு.அமை புரையும் வனப்பின், பணத்தோள், பேரமர்க் கண்ணி இருந்த ஊரே, நெடுஞ்சேண் ஆரிடை அதுவே நெஞ்சே! ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து