பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்றால்; நேர கோ யானே,

புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்!

தேரில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உள்ளத் துடிப்பை உணர்ந்தான் தேர்ப்பாகன்; இளைஞன் குடும்பத்தோடு பல் லாண்டு காலமாக வாழ்ந்து பழகியவன் அவன்; இளைஞன் தன் காதலியை முதன் முதலாகக் கண்ட காலத்திலும், மணம் நிகழ்வதற்குமுன், அவளைக் காண மறைந்து மறைந்து சென்ற காலங்களிலும், அவனுக்குத் தேரோட்டியவன் அவன். அதல்ை இளைஞனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள அன்புப் பிணைப்பு எத்தகையது என்பதை அவன் அறிந்திருந் தான்; இளைஞனுக்கு விடையளித்து வழி அனுப்பியபோது அவள் பட்ட பாட்டினையும், அவனை விடுத்துவந்த இளைஞன், வழியில் அவள் நினேவால் பட்ட பாட்டினையும் அவன் கண் டிருந்தான். அதனல் அவனே விரைவில் கொண்டுபோய் வீடு சேர்க்கவேண்டியது தன் கடிமை என உணர்ந்தான்.

அவன் ஒட்டும் தேர் நல்ல உறுதி வாய்ந்திருந்தது; எத் தகைய நிலத்தில் ஒடினும் இடையற்றுப் போகாது அது;

2.குறுந்தொகை 131. ஒரேர் உழவனt - தவிையைக் காணத் துடிக்கும் தவைன் உள்ளத் துடிப்பிற்கு ஒரேர் உழ வன் உள்ளத்துடிப்பை உவமைகாட்டிய சிறப்பால் புலவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் இது.

அமை.மூங்கில்; புரையும்-ஒக்கும்; அமரிக்கண்ணிமருண்டு நோக்கும் கண்கள்; ஆரிடை-அரிய இடத்தில்: பட்டஉண்டான, செவ்வி.பக்குவமான புனம்.நிலம்; விதுப்பு-விரைவு உற்றன்று-அடைந்தது; ஆல். அசைநெஞ்சு விதுப்புற்றன்று யான் நோகு என மாற்றுக.