பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1#9

விட்டாள்; பரத்தையர் சேரிக்கு வந்த அவர், நம்மைக் கண்டு நம்மீது காதல் கொண்டு, நம் மனை வந்து சேர்ந்தார்; வலியவந்து சேர்ந்தவரை ஏற்றுக்கொண்டோம் நாம். இதில் நம்மீது என்ன தவறு உளது?

தோழி நம் வாழ்வின் சூழ்நிலையும் அத்தகையதாகி விட்டது. பரத்தையர் சேரியைக் கடந்து ஊரினுள் தடை யின்றி உலாவி, நாம் விரும்பும் ஆடவரை மணந்து வாழும் வாழ்க்கை உரிமையை, இவ்வுலகியல் நமக்கு அளிக்க மறுத்து விட்டது. அதனல், வாழ்க்கைத்துணே பெற்று வாழத் துடிக் கும் நாம் நம் சேரிக்கு வலிய வந்து சோவோரையாவது ஏற்று இன்புறும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம்; ஊரில் இத்தகைய சேரிகள் உள என்பதை உணர்ந்த ஊர்ப்பெண் கள், தம் கணவன்மாரைச் சேரிப்பக்கம் செல்லாவாறு விழிப் பாயிருந்து காத்துக்கொள்ளுதல் வேண்டும்; அதில் அவர்கள் தவறிவிட்டார்கள்; காப்பற்றுப் போன ஆடவர்கள், நம் வ&யில் வந்து வலிய வீழ்கிரு.ர்கள். வாழ்க்கைப்பசிகொண்டு அலையும் நாம் அவர்களே வயப்படுத்திக்கொள்கிருேம்; ஆக, இதில் நம் மீது ஏது தவறு? தவறு இல்லையாகவும், அவள் நம்மைச் சினப்பதில் யாது பயன்?

தோழி! இதோ பார்; குளம் இருக்கிறது; குளத்து நீரில் வாளைகள் வாழ்கின்றன; குளக்கரையில் வைத்து வளரிக்கப்பட்டுள்ளது. இம்மாமரம்; மாமரக் கிளைகளில் ஒன்று, குளத்து நீரில் படியுமாறு நீண்டு வளர்ந்துளது. அக் கிளைகளில் பழுத்த கனிகளில் ஒன்று குளத்தில் காம்பற்று வீழ்ந்துவிட்டது. அதைக் குளத்தில் வாழும் வாளை மீன் ஒன்று தன் பசி வேட்கையால் விரைந்தோடி வந்து வாயிற் கவ்வி விழுங்கிவிட்டது. தோழி! வாளை வாழிடம் விட்டு வெளிப்பட்டுக் கரையேறிச் சென்று கனிகளைப் பறித்துத் தின்னவில்லை. அவ்வாய்ப்பு அவ்வாளைக்கு மட்டுமில்லாமல், அதன் இனம் அனைத்திற்குமே மறுக்கப்பட்டுள்ளது. மரத் தின் கிளை வாளை வாழும் குளம் நோக்கி வளர்ந்து விட்டது;