பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய சுரு மீன்கள் கூட்டமாக வாழும் கழிகளைக் கொண்டது எனக் கூறக் கேட்டுளேன்; அதுவே என்கினப் பெரிதும் கலக்கத்திற்கு உள்ளாக்குகிறது. நம்மை நினைந்து வரும் அவனுக்கு, இடைவழியில் அச்சுருக்களால் யாதேனும் ஏதம் உண்டாகியிருக்குமோ? அதல்ைதான் அவன் வந்தி லனே என எண்ணி ஏங்குகிறது என் உள்ளம்’ என்று கூறி, “நான் மறுப்பதால், என் காதலனுக்கு அத்தகைய கேடுண் டாதலும் உண்டு கொல்’ என்ற எண்ணம் அப்பெண்ணின் உள்ளத்தில் எழத் தூண்டி, அவளை, அவனே ஏற்றுக்கொள்ளு மாறு செய்து வெற்றி கண்டாள் தோழி.

சேரி சேர மெல்ல வந்து வந்து அரிது வாய்விட்டு, இனியகூறி வைகல்தோறும் நிறம்பெயர்ந்து உறையுமவன் பைதல்நோக்கம் கினையாய், தோழி!” . ‘ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன், பன்னுள் வந்து பணிமொழி பயிற்றி, என் கன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, வரைமுதிர் தேனிற் போகி யோனே!” b ‘அம்ம! வாழி தோழி! கொண்கன்

தான் அது துணிகுவன் அல்லன்; யான் என் பேதைமையால் பெருந்தகைகெழுமி நோதகச் செய்ததொன்றுடையேன் கொல்லோ? வயச்சுரு வழங்குநீர் அத்தம் - . . சின்னுள் அன்ன வரவு அறியானே.” .

  • குறுந்தொகை : 298. பரணர். அரிது - அருமையாக வாய்விட்டு. வாய் திறந்து வைகல் தோறும் - நாள்தோறும்; நிறம் பெயர்ந்து - உடல் நலம் கெட்டு, உறையுமவன் . வாழ்பவன், பைதல் - துன்பம்;

b குறுந்தொகை 1 76. வருமுலையாரித்தி பணிமொழி -பணிவுடைமையை உணர்த்தும் சொற்கள்; பயிற்றி . பலமுறை கூறி நன்னர் . நல்ல; நெகிழ்த்த-இரங்