பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

நிலவுலகின்கன் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடியினராந் தமிழர்தம் தொன்மை யினையும், பண்டையத் தமிழ் மக்களின் பண்பு, மறம், அறிவு, ஆன்மை, காதல்வாழ்வு, மனேயறம், போரறம், ஆட்சிநெறி, கலைவாழ்வு, சான்றாண்மை, இலக்கிய மேம்பாடு முதலாம் நாகரிகச் சிறப்புக் களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இக்கால நமக்குணர்த்தி நிற்பன மறைவுற்றனபோக எஞ்சி நமக்குக் கிடைத்துள்ள தமிழ்க் கருவூலமாம் கடைச் சங்ககால நூல்களேயாம். x

ஆயினும், இச்சங்க நூல்களை எல்லோரும் எளி தில் கற்றுணர்தலுடன், அவற்றுள் புதைந்து கிடக் கும் ஆழ்ந்த உண்மைகளையும் பொருள் நயங்களை யும் காண்டல் அருமையேயாம். எனவே, இந்நூல் களுக்கு முன்னுளில் பழையவுரைகாரர்களால் எழுதப்பெற்றுள்ள பதவுரை பொழிப்புரை விளக்க வுரை முதலாம் உரைகளுடன் இக்காலத்திற்கேற்ற முறையிலும் தக்க ஆசிரியர்கள் வாயிலாக ஆராய்ச்சியுரைகளை வெளியிடுவது, அவற்றைப் படித்துப் பயனடைய விழையும் எல்லா வகையான மக்களுக்கும் உறுதுணையாகும் என்னும் கருத்துடன் இலக்கியப் புதையல் வரிசையினைக் கொணர முற் பட்டோம். . - .

அவ்விழுமிய நூல்களுள், ஆன்றாேர்களால் தொகுக்கப் பெற்று, எட்டுத்தொகை என வழங்கும் தொகை நூல்களைக் குறிக்கும் ‘நற்றினை நல்ல