பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

புற்றதுபோல், பண்டு அவர் அளித்த அன்பை மறவாது, பிரிந்துசென்ற அவர் மீண்டுவந்து பேரன்பு காட்டுவர்; அதல்ை இழந்த என் நலங்களை மீட்டும் பெறலாம் எனும் நம்பிக்கையே, என்னே இந்நிலையிலும் வாழச் செய்கிறது” எனக் கூறிஞள்.

காதலர் பிரிவால் தான் உற்ற கடுந்துயர், அத்துயருறும் காலத்தும் கணவன் அன்பை நம்பி உயிர் வாழும் நற்பண்பு ஆகியவற்றைப் புலப்படுத்திடப் பெருமையுற்றவள், ‘தோழி! என் உயிர் வாழ்வது, அவன் மீண்டுவரும் விரைவைப் பொறுத் துளது; ஆகவே அவர் விரைந்து மீள வழிகாணுவாயாக’ எனக் கூருமற் கூறிப் பணித்த பெருமை பாராட்டற்குரியது.

“புனவன் துடைவப் பொன்போல் சிறுதினை

கிளி குறைத்து உண்ட கூழை இருவி பெரும்பெயல் உண்மையின் இக் ஒலித்தாங்கு என் உரம்செத்தும் உளெனே தோழி! என் நலம் புதிது உண்ட புலம்பிளுனே.” .

அவன் பொய்ப்பின் நான் என் செய்வேன்?

மணத்திற்கு வேண்டும் மாநிதி ஈட்டச் செல்வேன்; வேண்டும் பொருள் சேர்ந்ததும் விரைந்து வந்து வரைந்து கொள்வேன்’ எனக் கூறிச் சென்றவன், நாள் பல ஆகியும் வந்திலன். வருவான்; வரைந்து கொள்வான்; வரையா

குறுந்தொகை: 133 உறையூர் முதுகண்ணன் சாத்தன்.

புனவன்-குறவன்; துடிவை-தினைப்புனம்; குறைத்துஒடித்து; கூழை.மொட்டையான; இருவி.தினைத்தாள்; பெரும் பெயல்-பெருமழை ஒலித்தாங்கு-தழைத்தாற்போல்; உரம். நாணம், நிறை முதலாம் பேண்மைக் குணங்கள்,