பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திே ”

களை உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்துவன அகப்பாடல்கள்; அம்மக்களின் அகவாழ்விற் குத் துணையாய் அமைந்து, அதை வளப்படுத் த உதவும் பொருளிட்டும் வகை, போராற்றும்வசை, அரசியல் அறம் ஆகியவற்றை உணர்த்துவன புறப்பாடல்கள். இவ்வாறு, அகப்பொருளும், புறப்பொருளும் உடையவாக, எத்தனையோ ஆயிரம் பாக்களை பாடி அளித்தார்கள். அக்காலப் புலவர் பெருமக்கள். ஆல்ை, அப் பாடல்களை அழியாமல் காக்க வல்ல வாய்ப்பு, இன்று உள்ளதுபோல் அன்று இல்லாமை யால், எத்தனையோ ஆயிரம் பாக்கள் மறைந்து அழிந்து விட்டன; இவ் வழிவுநிலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வரும்போது, நம் முன்னேர் ஈட்டி வைத்த, அப் பெருநிதியை இறவாமல் காக்க வேண்டும் எனும் கடமை யுணர்வு வரப்பெற்ற ஒரு சில பெரியார்கள், முனைந்து, முயன்று, அவ்வகையில் ஒரளவு வெற்றி கண்டனர்.

தம் காலத்தில் கிடைத்த பாக்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒருவகையில் ஒழுங்குபடுத்தி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசையில் தொகுத்து வைத்தார்கள்; அவ்வரிசையில், எட்டுத் தொகை எனும் தொகுப்பில் இடம்பெறுவது, குறுந்தொகை, எட்டுத் தொகை நூல்களுள், நல்ல குறுந்தொகை” எனும் சிறப் போடு இரண்டாவதாக இடம்பெறும் குறுந்தொகை, அளவு கால் சிறியதே. எனினும், அழகால், ஏனைய இலக்கியங்களைக் - காட்டிலும் குறைந்தது அன்று அவற்றினும் ஒரளவு உயர்ந்தது என்றே கூறல் வேண்டும். கள்ளன நம்பிலுைம் தம்பலாம், குள்ளன நம்பக்கூடாது’ என்பர்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும்; உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து”, சிற்றுளியால் கல்லும் தகரும்

அரசு நிலையாலும், பொருள் நிலையாலும், பண்டுதான் பெற்றிருந்த சீரும் சிறப்பும் இழந்து இழி தி ையுற்றிருக்கும் இக்காலத்திலும், தமிழரும், தமிழகமும் உலக மறைத்தில்