பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

இனிமையுடையதாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப்பெறுதலும் வேண்டும் என்றும் விரும்பினர்கள்; அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். வானத்தில் விளங்கும் வெண்ணிலாத் தோற்றத்தை, நீலவான் ஆடைக்குள் உடலைப் போர்த்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை’ என்று கூறும் சொல்லோவியத்தில் எத்துணை இனி மைப் பண்பு திகழ்கிறது கான் மின். o

செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடைய வாகும். செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, அவ்விலக்கியச் செல்வங்களைத் தம் அழியாப் பெரு நிதியாகப் படைத்த தமிழ்மக்கள் பெற்றிருந்த பெருஞ்சிறப்பின் விளைவாகும். கரும்பு களர்நிலத்தில் விளையாது; இனிய கருத்தும், இனிக் கும் சொற்களும், தியொழுக்கம் உடையார்பால் தோன்று வது இயலாது; உள்ளத்தின் ஒளியே உரையில் புலப்படும்: ஆகவே, தூய உள்ளம் உடையாரிடத்துமட்டுமே தூயசொற் கள் தோன்றும்; அவர் செயலே தூய்மையில் தோய்ந்து திகழும். ஆகவே, இனியவே உரைக்கும் நாநலம் உடிை யார், இயல்பாலும் இனியரே ஆவர். தமிழ், இனிமைப். பண்பில் தசிைறந்து விளங்குகிறது என்றால், அம்மொழிக்கு உரியோராகிய தமிழர் தலைசிறந்த நாகரிகம் வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும். இது உண்மையென்பதைப் பழந் தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப்பிடிப்பைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார், அனைவரும் உணர்வர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, நம் பழம் பெரும் மூதாதையரின் பண்பாட்டுப் பெருமையினை, இற் றைத் தமிழரும், பிறரும் அறிதல் வேண்டும் என்ற அவா வின் விளைவால் எழும் நூல்களுள் இஃது இரண்டாவதாகும். பழைய தமிழ் இலக்கியங்கள், அகப் பொருள் உணர்த்துவன புறப்பொருள் உணர்த்துவன என இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்: ஒருவனும், ஒருத்தியும் கலந்து வாழும் அன்பு வாழ்க்கையில் அவர் மனத்திடை நிழலாடும் உயிரோட்டங்