பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கடற்கரையறு சிறுவெண் காக்கை, கீத்துநீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு பூக்கமழ் பொதும்பில் சேக்கும் துறைவளுேடு யாத்தேம்: யாத்தன்று கட்பே; அவிழ்த்தற்கு அரிது; முடிந்து அமைந்தன்றே.” a

நாடன் கேண்மை தலைபோகாது:

காதலன் நட்பு அவிழ்த்தற்கு அரிது என்று கூறித் தோழியை வாயடங்கப் பண்ணிவிட்டதாக எண்ணி ஆறுதல் கொண்டாள்; ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம், அவள் உள்ளத்தில் மீண்டும் ஒர் அச்சம் குடி புகுந்தது; தோழி ஒருத்தி; அவள் வாயை மூடி விடலாம்; ஆனல் அலரி கூறித் திரியும் ஊர்ப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் வாயை மூடிவிட முடியுமா? தோழியின் வாயைமட்டும் அடக்கிப் பயன் இல்லை; அவர்கள் வாயையும் அடக்க வேண்டும். அப்பொழுதுதான் தன் உள்ளத்திற்கு ஓய்வு பிறக்கும் என்று அறிந்தாள். அந்நியிேல், அவ்வூர்ப் பென் டிரீ அரங்கிற்குத் தலைவியர் என மதிக்கத் தக்கார் சிலர், அவளும் அவள் தோழியும் நிற்கும் இடத்திற்கு அணித்தாக வரக் கண்டாள். உடனே, அவர்கள் காதில் படும்படி, “தோழி! காதலனேடு கலந்து பழகியவள் நான்; அவன் அன்பு ஆழம் உடைத்து; அவன் நற்பண்பு கடல்போல் பரந் தது. ஆதலின் அவன் என்மீது கொண்டிருக்கும் காதல்

a குறுந்தொகை: 313.

கரையது.கரையில் வாழ்வது; நீத்து-வெள்ளம்; இரும்கரிய, கழி-உப்பங்கழி, பொதும்பில்-பூஞ்சோலையில்; சேக் கும்-தங்கும்; யாத்தேம்-கட்டுண்டோம்; யாத்தன்றுநன்றாகக் கட்டப்பட்டது; முடிந்து அமைந்தன்று-பொருந்த முடிக்கப்பட்டுள்ளது.