பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 குற்றம் பார்க்கில் மிஸ்டர் என்று கூப்பிட மாட்டான்), "டோண்ட் ஒர்ரி. உன்னை மாதிரி ஆட்களைக் காப்பாத்துறதுக்குன்னே நான் பல பேர்ல, பல ஊருங்களைக் காட்டி லட்டர் பாட் வச்சிருக்கேன். நீயே ஒனர் மாதிரி கையெழுத்துப் போட்டுடு. அந்த டிரைவரையும் சரிக்கட்டிக்கோ அவனையும் கையெழுத்துப் போடச்சொல் அதுவே போதும்." "தேங்க் யு லார்! நீங்க இல்லாட்டி என் வேலை போயிருக்கும். கம்பியும் எண்ணியிருப்பேன்." பண்டாரத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது. வான் டிரைவர் வாகிப்பமியான், முதலில் முடியாது என்றான். அவன் அப்படி முடியாது என்றால், தன் கதை முடிந்துவிடும் என்று சிவராமன் அழுது கொண்டே சொன்னதால், டிரைவருக்கு மனமிரங்கியது. அவனது - அதாவது ஒரு டிரைவரின் ஒரு அங்குலக் கையெழுத்தில் ஒரு சேல்ஸ்மேனின் எதிர்காலம் தொங்குகிறது என்பதை அறிந்ததும், அவன் போட்டே விட்டான். பண்டாரம், சிவராமனின் எக்ஸ்பிளனேஷனுக்குப் பரிந்துரை” கொடுத்தான். சிவராமன், வான் ரிப்பேரானாலும், அந்தச் சாக்கில் கோவையில் தங்காமல், கருமமே கண்ணாகி, நண்பனின் காரில் கன்னியாகுமரி போனான் என்றால், அவன் எவ்வளவு டிவோட்டட்' ஊழியனாக இருப்பான்! சிவராமன் போன்ற ஊழியர்களினால், கம்பெனியே பெருமைப்படலாம்! சொல்லப் போனால், அந்த உண்மையான ஊழியன்மீது சந்தேகப் பட்டதற்காக, கம்பெனி வருத்தம் தெரிவிக்க வேண்டுமாக்கும் மானேஜர், பைலைப்படித்தார். முன்னால் அப்படியும் இப்போது இப்படியும் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று அவர் சந்தேகப்படவில்லை. 'இம்பிரிண்ட்’ பத்திரிகையில் ஒரு கண்ணும், பைலில் ஒரு கண்ணுமாக வைத்துக் கொண்டு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்துப் போட்டதோடு அல்லாமல், வார்னிப்பேருக்காகச் சிவராமன் செலவழித்த இருநூறு ரூபாய் 'பில்லையும்' பாஸ் செய்தார்.

  • சிவராமன், பண்டாரத்திற்கு ஆப்தமாகி விட்டான்.

பண்டாரம் டிரைவர் வாகிப்பமியானை, இளக்காரமாகப்