பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 99 'மெமோவைப் பார்த்ததும் சிவராமன் பயந்து விட்டான். அவனைப் போலீசில் ஒப்படைக்கப் போவதாகவும், பண்டாரம் பார் மானேஜர்' கையெழுத்துப் போட்டு மிரட்டியிருந்தான். ஸ்டெனோ மங்கை அழுதே விட்டாள். சிவராமனுக்கு ஒரு வழியைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஒரு கூடை ஆப்பிள் பழத்துடன், நேராகப் பண்டாரம் வீட்டிற்குப் போய், அவன் காலின் முன்னால் குப்புற விழுந்தான். பண்டாரம், விழுந்தவனை நிறுத்தி ஆசீர்வாதம் செய்து கொண்டும், ஒரு ஆப்பிள் பழத்தைக் கடித்துத் தின்று கொண்டும் "நல்லா பழுத்திட்டு; அதனால்தான் டேஸ்டாக இருக்கு!" என்றான். "மிஸ்டர் பண்டாரம், நான் ஒரு அறிவு கெட்ட மடியன். நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்' என்றான். பண்டாரம் அவனுக்கும் 'உலக அறிவைப் போதித்தான். மறுநாள் பண்டாரம் சொன்னபடியே சிவராமன் 'எக்ஸ்பிளனேஷன் எழுதிக் கொடுத்தான். கோயமுத்துரில் புதன் கிழமை மாலையில் பெட்ரோல் போட்டதும், கன்னியாகுமரியில் அதே நாள் மத்தியானம் அவன் போய்ச் சேர்ந்ததும் முரண்பாடானவை அல்ல. வானுக்கு, கோவையில், செவ்வாய்க்கிழமை இரவில் நோய் ஏற்பட்டதாம். உடனே டிரைவரிடம் வண்டியை ரிப்பேர் செய்து விட்டு, பெட்ரோலும் போட்டுக் கொண்டு வரும்படி சிவராமன் சொல்லி விட்டு, அன்று இரவோடு இரவாக கம்பெனியின் விற்பனை நலனைக் கருதி, நண்பரின் காரில் கள்ளியாகுமரி போய்விட்டானாம். கம்பெனிக்காக, இரவு கூட பாடுபடும் அவனை குறை கூறுவது. வேதனையைக் கொடுக்கிறதாம்! சிவராமன் நீட்டிய காகிதத்தை வாங்கிக் கொண்டே "வெரிகுட் வெரிகுட்! ஆனால் ஒண்ணு, நீ கோயமுத்துர்ல வேனை ரிப்பேர் பார்த்ததுக்கு ஒரு ஒர்க்ஷாப்பின் லெட்டர் 'பாட்ல ஒரு பில் போட்டுக் கொடுத் துடு, உனக்கும் ஸ்ரி, நமக்கும் அதுக்குரிய பணம் கிடைச்சிடும். மானேஜருக்கும், நீ யோக்கியன் என்கிறதுக்கு ஆதாரம் கிடைச்சிடும்" என்றான். "என் கிட்ட லெட்டர்பாட் இல்லியே. லார்" (இப்போது