பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 குற்றம் பார்க்கில் கொள்வது போல் தோன்றியது. "லார், நம்ம அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் மிஸ்டர் பண்டாரம் எல்லார் கிட்டேயும் பிரசன்டேஜ் கேட்கிறார். சம்திங்' கொடுக்காத ஆட்களைப் பத்தி, சம்திங்கா எழுதி வைத்து விடுகிறார். அவர் வாங்கி, உங்களுக்கும் பங்கு கொடுப்பதாக வேறு அவர் சொல்லிக்கிட்டு திரியுறார். ஆபீஸ் குட்டிச்சுவராய்ப் போச்க, அவருக்கிட்ட காசு கொடுக்காம ஒரு காரியமும் நடக்காது என்கிற நிலைமை வந்துட்டு." ஸ்டெனோ மங்கை, இன்னும் பேசிக் கொண்டே போயிருப்பாள். ஆனால், மானேஜர் அவளை விடவில்லை. "இது என்ன அக்கப் போராப் போச்சி. ரூல்ஸ்படி என்ன நடக்கனுமோ அது நடக்கும். பண்டாரத்துக்கும் மற்றவர்களுக்கும் ஆயிரம் இருக்கும். எனக்கென்ன வந்தது? நீங்க போகலாம்." மங்கை மருவித் தயங்கி வெளியேறினாள். அவள் வெளியேறவும், பண்டாரம் உடனே உள்ளே போகவும் சரியாக இருந்தது. அவளுக்கும் சிவராமனுக்கும் ஒரு வகையான 'இது' இருப்பது அவனுக்குத் தெரியும். அவள் ஏதாவது வத்தி வைத்திருப்பாள் ள்ன்று யூகித்துத்தான் அவன் உள்ளே போனான். மானேஜர், அவனைக் கோபமாகப் பார்த்தார்: "எனக்கு வேற பங்கு கொடுக்கிறதா சொல்றியாமே" என்று கேட்கவில்லை. கேட்கப் போனார். அதற்குள் பண்டாரம் முந்திக் கொண்டு "ஸ்ார், இன்றைக்கு "மிர்ரர்' பத்திரிகையில் சேக்ஷ்பியரின் ஹாம்லட்டைப் பற்றி ஒரு 'ரிசர்ச் கட்டுரை வந்திருக்கு படித்தீங்களா?" என்றான். மானேஜர், நினைத்ததை மறந்து, மறந்ததை நினைத்தார். "ஆமாம், வீட்ல, ஒரு கிளான்ஸ் பார்த்தேன். ஆனால் கொண்டு வர மறந்துட்டேன்." "இதோ, நான் கொண்டு வந்திருக்கேன் ஸார்..." மானேஜர் மிர்ரரைப் புரட்டினார். "லார்...சிவராமன் பைல்ல, கையெழுத்துப் போட்டிட்டிங்களா?" என்றான் பண்டாரம். மானேஜர், அவசர அவசரமாக கையெழுத்துப் போட்டுவிட்டு, மிர்ரரைப் புரட்டினார். பண்டாரம் அவசர அவசரமாக வந்து, டைப்பிஸ்டை டைப் அடிக்கச் சொன்னான்.