பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குற்றம் பார்க்கில் ஆட்டுத்தலை வந்துட்டா. உன் தலை தப்பும்" என்றான் பண்டாரம். டிரைவருக்கு வேறு வழியில்லை. மறுநாள், ஒரு ஆட்டுத் தலையுடன், டிரைவர் பண்டாரம் வீட்டிற்குப் போனான். அவனோடு, இன்னொரு அழுக்கு வேட்டி ஆசாமியும் போனார். பண்டாரம், ஆட்டுத்தலையை வாங்கிக் கொண்டே "ஏம்பா, ஆட்டுக்காலும் வாங்கிட்டு வரக்கூடர் து?. சூப் போட்டுக் குடிச்சா நெஞ்சு வலி போகுமாம்" என்றான். + "அடுத்த டி.ஏ. பில்லுக்கு, ஆட்டுக்கால் தாறேன். ஸார். ஆட்டுத் தலையை வெட்டுறதுக்காக இவரைக் கூட்டி வந்தேன்" "எப்படியோ! உனக்குப் பிழைக்கத் தெரிஞ்சா சரி..." பண்டாரம், ஆட்டுத்தலையைப் புரட்டிப் பார்த்தான். பெரிய தலை, ருசியாக இருக்கும். "வாகிப்பமியான், ரெண்டு காதுலேயும் கலர் பென்சிலால் கோடு போட்டிருக்கே, எதுக்கு?" என்று கேள்வி கேட்டான் பண்டாரம், "அதுவா? ஸார் காலையிலேயே கசாப்புக் கடைக்குப் போனேன். அப்போ ஆடு கீடு வெட்டல. எங்க ஐயாவுக்கு, இந்த ஆட்டுத்தலைதான் வேணுமுன்னு சொல்லி உயிரோட நின்ன ஆட்டுக்காதில் கோடு போட்டுட்டு வந்தேன்; அது தான் இது". பண்டாரம், ஆட்டுத்தலையின் காதைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு, கிச்சனில் இருந்த அம்மாக்காரியிடம் கொடுக்கப் போனான். அப்போது அழுக்கு வேட்டி ஆசாமி "நில்' என்று சொல்லிக் கொண்டே, ஒரு விசில் எடுத்து ஊதினார். நான்கைந்து பேர், சொல்லி வைத்தாற்போல் பல மூலைகளிலிருந்து ஓடிவந்து பண்டாரத்தை மறித்துக் கொண்டார்கள். வாகிப்பியான் சிரித்தான். டேய் பண்டாரம், என்னை என்ன சிவராமன்னு நினைச்சியா? நீ ஆட்டுத்தலை கேக்குற விவகாரத்த நம்ம மானேஜர் சரியா கேக்காததினால, நம்ம கம்பெனி மேல் ஆபீஸ்ருங்களுக்கு எழுதினேன். அவங்க, இந்த லோகல் போலீஸ் ஐயாவையும் கூட்டிக் கிட்டுப் போய். ஆட்டுத்தலையில் காதுல குறி போட்டாங்க. எனக்கு காது குத்தப் பார்த்தே கடைசியில ஆட்டுக்காதிலே குத்தி, உன் காதுலே." பண்டாரம், ஆட்டுத்தலையுடன், ஐந்தாறு பேர் புடைசூழ,