பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 103 கம்பெனி அலுவலகத்தில், மானேஜர் தங்க்சாமியின் முன்னால் ஆஜர் செய்யப்பட்டான். ஐந்தாறு பேரில் ஒருவரான கம்பெனி செகரட்டரியைப் பார்த்ததும் தங்கச்சாமி வெலவெலத்துப் போனார். செகரட்டரியை கெஞ்சும் பாவனையில் பார்த்துக் கொண்டே, 'ஸார் என் ஆளுங்ககிட்ட வேணும்னா கேளுங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. நாள்..பிறத்தியார் சொத்துல ஒரு பைசாவுக்குக் கூட ஆசைப்பட்டது இல்லே." * யூனிபாரத்தில் இருந்த போலீஸ்காரர் பேசினார் . "மிஸ்டர் தங்கசாமி, எங்களுக்கு எல்லா விவரமும் தெரியும். நீங்க நேர்மையானவர் தான், சந்தேகமில்லை.ஆனால், ஸ்டெனோ, பண்டாரத்தைப் பற்றிச் சொல்லிய போதும் சரி, வாகிப்பமியான் சொல்லும்போதும் சரி. நீங்க பொறுப்புள்ள ஆபீசர் மாதிரி, விவகாரத்தை அக்கறையோடு விசாரிக்கல. ஒரு ஆபீசர் சட்டத்தின் எழுத்தை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் உணர்வையும் பார்க்கணும். எவனும் எக்கேடும் கெடட்டும். நாம் ஒழுங்கா இருந்தாச் சரி' என்று பல நேர்மையான ஆபீசருங்க இருக்காங்க. இந்த மனப்பான்மை ஒருவிதமான சுயநலந்தான் வாங்குகிற சம்பளத்துக்குரிய பொறுப்பை தட்டிக் கழிக்கிற மாதிரி நடந்து கொள்ளும் போக்கும். ஒருவித லஞ்சந்தான். என்னைக் கேட்டால், இதுதான் பல லஞ்சங்களுக்கு வழிவகுக்கும் கரெப்ஷன்'. ஆட்டுத்தலை வாங்கின பண்டாரத்தைத் தண்டிக்க சட்டமிருக்கு. ஆனால் தலையை ஆட்டிக் கொண்டே நிலைமையை தலைக்குமேல் விட்ட, உங்கள மாதிரி நேர்மையான ஆட்களைத் தண்டிக்க சட்டம் இல்லை." கம்பெனி செகரட்டரி போலீஸ்காரர் பேச்சுக்குத் தலையாட்டினார். பண்டாரம், ஐந்தாறு பேரில் ஒருவர் தவிர, மற்றவர் சூழ வெளியே கொண்டுப்போகப்பட்டான். அவன் கையில், ஆட்டுத்தலை சிரித்துக் கொண்டிருந்தது!