பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மேதைகள் தோற்றனர் பத்துக்கும் அதிகமான குடித்தனங்கள் உள்ள பெரிய' வீட்டின் முதல் போர் ஷன் பள்ளி ஆசிரியர் சங்கரனின் வீடு. மாணவர்களிடம் கத்திய மயக்கத்தில், வீட்டுக்குள் சோர்ந்து போய் போனபோது வராந்தாவில் புத்தகங்களோடு போராடிக்கொண் டிருந்த மகன் கணேசனைப் பார்த்ததும், ஒரு ஆஸ்ப்ரோ' சாப்பிட்டது போல் இருந்தது அவருக்கு. கணேசன், காலடிச் சத்தங் கேட்டு, புத்தகத்திலிருந்து கண்ணை விடுவித்து, தந்தையின் வருகையைப் புன்முறுவலால் வரவேற்று விட்டு, மீண்டும் புத்தகத்தில் சங்கமமானாள். சங்கரன், செருப்பைக் கழற்றிவிட்டு, வீட்டிற்குள் போனபோது அவர் மனைவி 'டி' போடத் தொடங்கினாள். சட்டையைக் கழற்றப்போன அவர் ஜன்னல் வழியாகத் தன் மகனைப் பார்த்தார். பெருமிதமாக இருந்தது அவருக்கு. அவனுக்கு, தான் கற்றுக் கொடுத்த யோகாசனங்கள் வீன் போகவில்லை என்பதில் அந்தத் தந்தைக்கு ஒரு திருப்தி. சர்வாங்காசனத்தால், கணேசனின் மார்பு பரந்தும், தனுராசனத்தால் முதுகு நேர்க்கோடு போலவும், பத்மாசனம் செய்து, புருவத்திடையே கண் பார்வையை ஒருமுனைப்படுத்தியதால் உறுதியின் நிழல்போல் நெற்றியில் தெரிந்த துல்லியமான ஒரு நரம்புக் கோடும், மூக்கின் நுனியில் சுடர்விட்ட ஒருவித ஒளியும், சாவாசனத்தால் ஏற்பட்ட உறுதி கலந்த அமைதிக் களையும். கணேசனிடத்தில் ஒருவிதக் கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மகனை விழுங்கிவிடுபவர் போல்' பார்த்த சங்கரனுக்கு நிகழ்காலத்தை உருவாக்கிய கடந்தகால நினைவோட்டம் நெஞ்சுக்கு முன்னால் நின்றது. சங்கரன் பி.ஏ. படித்தபோது பெரிய பெரிய பதவிகளை யு.பி.எஸ்.ஸி. மூலம் பெறமுடியும் என்பது அவருக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தவர்கள் அவருக்கு ஆசிரியர்களாகவும் வரவில்லை. ஐ.ஏ.எஸ். என்ற ஒன்று இருப்பதே, வயது வரம்பு தாண்டிய பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. எல்.டி.ஸி. யு.டி.ஸி.