பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 குற்றம் பார்க்கில் விண்ணப்பித்திருக்கிறான் எப்போதும் படிக்கும் அவன், அந்த வேலைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக விழுந்து விழுந்து படித்தான். "ஓர்லட் சிட்சுவேசனை சர்வே பண்ணு பார்க்கலாம்" என்றார் சங்கரன். அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள், அவருக்கு ஒருவித மோன நிலையைக் கொடுக்கும். கணேசன் விளக்கினான் ஈஸ்ட்-வெஸ்ட் டிடெண்ட், வில்லி பிராண்ட் ராஜினாமாவாலும் அதை சோவியத் திரிபு வாதமும் மேற்கத்திய ஏகாதிபத்யமும் சேர்ந்து செய்த தந்திரம் என்று சீனா வர்ணிப்பதாலும், நல்லுறவு பாதிக்கப்படுமோ என்ற உலக அச்சம்; அந்த அச்சம் அவசியமற்றது என்பது போல் மாஸ்கோவில் நடந்த பிரெஸ்நோ-நிக்ஸன் உச்ச கட்டப் பேச்சுக்கள், அமெரிக்காவின் தார்மிக ஆதிக்கத்தில் இருந்து விடுபட நினைத்த கனடாவில், பிரதமர் ட்ரூடோ புதிய பலத்தைப் பெற்றிருப்பது ஐரோப்பிய பொருளாதார பொதுச் சந்தை, ஐரோப்பா, அமெரிக்காவின் செல்வாக்கில் இருந்து தன்னை விடுவிக்க நினைப்பது ஜப்பானில் பிரதமர் தானகோவின் சகாக்கள் பதவிகளைத் தூக்கியெறிந் திருப்பது கம்போடியாவில் நடக்கும் உள் நாட்டுப் போர்: லாவோஸில் பிரதமர் செளமிபெளமா கயிறு மேல் நடப்பது: தென் வியட்நாமில் முனிலிபல் தேர்தலை ஒட்டி மீண்டும் நடக்கும் கொரில்லா தாக்குதல்கள். இந்தியா அணுவாயுத சோதனையில் வெற்றி பெற்று. பாரத துணைக்கண்டத்தில் சூப்பர் பவராகவும்'. தென் கிழக்காசியாவில் 'வல்லரசு' என்ற அந்தஸ்தையும் பெற்றிருப்பது: சைப்ரஸ் நிலைமை ஆகியவற்றை எடுத்துக் கூறினான். பெருமையால் பூரித்த சங்கரன், மகனை இன்டர்வியூவிற்காக 'டிரிம் செய்வதை மறந்துவிட்டு, பொதுப்படையான விவாதத்தில் இறங்கினார். "சீனா அணுகுண்டு வெடித்த போது பேசாமடந்தைகளாக இருந்த நாடுகள், நம்நாடு சோதனை நடத்தியதும் கத்துவதைப் பார்த்தியா?" "தொடக்கத்தில் கத்திய நாடுகள் இப்போது அடங்கிட்டே. சீனா கூட நாம் சோவியத் தூண்டுதலில் செய்ததா சொல்லுது "