பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 107 "சோவியத் யூனியனிடமே உதவி பெற்றுவிட்டு, இப்போ அந்த நாட்டையே அது திட்டுது." "இது இயற்கை இப்படி ஒரு நிலைமை வரும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்கந்தர் 'இன்சைட் ஆசியா' என்ற புத்தகத்தில் 'சீன-சோவியத் தேசியங்கள், மார்க்லியம் வலியுறுத்தும் சர்வ தேசியத்தையும் மீறி, ஒரு நாள் மோதும்' என்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருக்கிறார்." "அப்பா ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, மா-லே-துங்கை அவரது ஆரம்ப கால அரசியலில், சீன கம்யூனிஸ்ட் கட்சியே 'எக்ஸ்பெல்' செய்திருக்கிறது." "இன்னொரு விஷயம் தெரியுமா? சீன கம்யூனிஸ்ப் புரட்சிக்கு வழி காட்டுவதற்காக, ஸ்டாலின், இந்தியரான எம்.என்.ராயை அங்கு அனுப்பினார். இது மாலே துங்குக்குப் பிடிக்கவில்லை." "எம்.என்.ராய், புரட்சிவாதியாய் ஒளிவிட்டது போல், இன்னொரு இந்தியரான ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவத்துறையில் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார். அன்னிபெஸண்ட் அவரை மகனாகத் தத்து எடுத்து, அவர் 'கடவுளின் அவதாரம்' என்று அறிவிக்க முயற்சி செய்த சமயத்தில், கிருஷ்ணமூர்த்தி, "நான் ஒரு சாதாரண மனுஷன்தான்’னு சொல்லி, அதுக்கு மறுத்திட்டாரு. கிருஷ்ண மூர்த்தியைப் பத்தியோ, அவர் எழுதிய புத்தகங்களைப் பத்தியோ நம்முடைப் பலபேருகாத் தொரியாது. ஆனால் மேற்கு நாடுகளுள்குறிப்பா-அமெரிக்காவுல. அவர் தத்துவமும், அவரும் ஒரு இனிஸ்டிடுவடின். அன்னி பெசண்ட் அம்மாவே' தத்து எடுத்தா அவரு எப்படிப் பட்டவரா இருப்பாரு..." "அப்பா ஒரு இன்ட்ரெஸ்டிங் சமாசாரம், அன்னி பெசண்ட்டும், பெர்னாட்ஷாவும் காதலர்கள். ஆனால், கடைசில. ஷா காலை வாரிட்டார்." "ஷாவை சர்ச்சிலுக்குக் கட்டோடு பிடிக்காது. அந்த மேதை சாவும்போது, சர்ச் சிலின் கைங்கரியத்தால் அரசாங்க மரியாதையோடு அவர் அடக்கமாகல." "ஷா கோமாளித்தனமா பேசினது போலத் தெரிஞ்சாலும், அவரு பேசுறதிலே அர்த்தம் இருக்கும். அப்பா குடித்து'க் கெட்டதை உணர்த்த அவர், மதுபானங்களைத் தொட்டது கிடையாது. பீடி. சிகரெட் சாரி..பிரிட்டனில் பீடி ஏது? புகை