பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் அண்ணாவி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும், சிகரெட்டை அனைத்துவிட்டு, வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு, பெளயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார் சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த மேரியல் இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட 'எக்ஸ்ரே' படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த விபூதி வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்து கொண்டே, "ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி. , ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?" என்றார் அந்த மனிதர், ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் மைக்ராஸ்கோப் பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, "என்னடா, புதிர் போடுறே " என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது "என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கெளரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி