பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 குற்றம் பார்க்கில் இருக்கிங்க." அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, "அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்." ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, "அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு, பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜூகேஷன் ஆபீஸ்ரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு" என்றார். "நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே." "தலை இருக்கையிலே வாலு ஆடுமா?" "ஏன்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷடப்படுத்துற?" "நல்லா இருக்கே தலைவராம் தலைவரு ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க " “ டேய், மெள்ளப் பேசுடா ஒரு அன்னக்காவடி வாத்தியாரு 'லோகல் பாலிடிக்ஸ்லே தலையிடுறதா, ஆபீஸருங்க என்மேல ஆக்ஷன் எடுக்கப் போறாங்க " "எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்ஷன் எடுக்கவுடுற துக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?" அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு 6WRIT கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் (65 يوني கொண்டிருக்கையில், ராமசாமி, "கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?" என்றார் "நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்