பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 109 முட்டாள்கள்னு நினைப்பேன். அதனால் நல்லா பேசினேன்'னார்" "ஆனால், அரவிந்தரோ நான் பேசுகிறபோது, மக்களை, நாராயணனின் சொருபங்களாக நினைப்பேன். அதனால நல்லா பேச்சு வந்தது'ன்னார். சர்ச்சில் அரவிந்தர் வேறுபாடுதான், கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் அடிப்படைக் கலாச்சார வேறுப்டு." "சர்ச்சில் இம்பீரியலிஸ்டா இருக்கலாம். ஆனால், அவரு இல்லன்னா ஹிட்லரை ஒழிச்சிருக்க முடியாது." "உண்மைதான். சேம்பர்லின் மூனிச் உடன்பாடு செய்து, விட்டுக் கொடுத்தாரு, சர்ச்சில்தான் ஹிட்லரை ஒழிச்சது." ஜெர்மன் மக்கள் மத்தியில் தேசிய வெறியை உண்டு பண்ணினவ்ர் ஹிட்லர். ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் கிடையாது. ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். "இதே மாதிரி நெப்போலியன் பிரெஞ்ச் ஆசாமி இல்லை. பிரெஞ்ச் காலனியான கார்ஸியா தீவைச் சேர்ந்தவர். இவர் அப்பா, அந்தத் தீவை மீட்கிறதுக்காகப் பிரான்சோட போராடிச் செத்தார்." "சமத்துவம் - சகோதரத்துவம் சுதந்திரம் ஆகிய தத்துவங் களைக் கொடுத்த பிரெஞ்ச் புரட்சிதான் கடைசில சர்வாதிகாரி களையும் கொடுத்தது." "இதனால்தான் தத்துவம் இல்லாத புரட்சி எடுபடாதுன்னு சொல்றது. மார்க்ஸிய தத்துவத்தையும் பார் லிமெண்டரி ஜனநாயகத்தையும் இணைச்சி ஒரு புதிய சித்தாந்தத்தை பரீட்சித்துப் பார்க்க சிவியில் அல்லெண்டே பாடுபட்டார். பாவம் அவரைக் கொன்னுட்டாங்க." தந்தைக்கும் மகனுக்கும் இடையே பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருப்பதைக் கவனித்த சங்கரன் மனைவி, கணவன் காய்கறி வாங்கப் போக மாட்டார் என்று தெரிந்தவள் போல், ஒரு பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். கணேசன் கா.சுப்பிரமணிய பிள்ளை எழுதிய இலக்கிய வரலாற்றின் முதல் பகுதியை எடுத்தான். சங்க காலம், சங்கம் மருவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம், நிகழ்காலம் ஆகிய காலக்கூறுகளில் தமிழின் வளர்ச்சியை அவன் மனம் எடை போட்டது. சங்கரன் உடனே "தமிழ் இலக்கியத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்" என்றார். -