பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 குற்றம் பார்க்கில் "அருமையான கருத்துச் செல்வங்களி: சங்க நூல்களையும் பிற நூல்களையும் பார்க்கிறபோது திகைப்பு வருது". "நீ திகைக்கிற ஆனால், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பழைய சுவடிகளை அலசினதோடு எப்படி விளக்கம் கொடுத்திருக்கிறார் தெரியுமா? அவர் இல்லாட்டி இன்னைக்கு பழைய இலக்கியமே கிடைச்சிருக்காது. இன்றையத் தமிழ் இலக்கியத்தைப் பத்தி நீ என்ன நினைக்கிற?" "தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சித்துறை இன்னும் பழமை மீட்ப வாதத்திலேயே இருக்கு, உதாரணமா பாரி, தேரைக் கொடுத்தது கொடைத்திறன்னு சொல்றதில்தான் இருக்கோமே தவிர, அது அதிகப் பிரசங்கித்தனம் ஆகாதான்னு நாம் ஆராயல. அகத்திணையில, தலைவி, தலைவனுடைய தோழன் கிட்ட பேசக்கூடாது. ஆனால், அவள் தோழி தலைவங்கிட்ட பேசலாம் என்கிறது மாதிரி காட்சிகள் அமைஞ்சிருக்கு. இரண்டு பெண்களுக்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வாலே இரண்டு கற்பு நிலைகள் வந்தது என்று ஆராய மனம் வரல. ஆராய்றவனை தமிழ்த் துரோகி என்பாங்க. நம்ம ஆராய்ச்சி ஒளவையை அதியமான் காதலி என்கிறதிலேயும் ராமனைத் தமிழன்னு நிரூபிக்கிறதிலேயம் அல்லது ஆரியன்னு சொல்றதிலேயுந்தான் இருக்கு." "நீ சொல்றது உண்மைதாண்டா, கன்னகி மதுரையை எரிச்சான்னு கை தட்றோம். ஆனால், அது எப்படி எரிக்க முடியு முன்னு நினைக்கிறதில்ல. அதோட, மணிமேகலையில், மதுரையை எரிச்ச பாவத்துக்காக, பழையபடி மானிடப் பிறவி எடுக்கப் போறதா. கண்ணகி சொல்லி வருந்துறா இது பலருக்குத் தெரியாது" "என்னைக் கேட்டால், கண்ணகி பாத்திரத்தை விட, மணிமேகலைப் படைப்புத்தான் மேலானது. ஒரு இளந்துறவிப் பெண்ணின் உள்ளப் போராட்டத்தை, சாத்தனார் அழகாப் பாடியிருக்கிறார். புதியோன் பின்னே போனதென் நெஞ்சே! மறக்க முடியாத கவிதை." - "புது கவிதையைப் பத்தி உன் அபிப்பிராயம் என்ன?" நிலவையும், பொண்ணுங்க முகத்தையும் பாடிக்கிட்டிருந்த மரபுக் கவிஞர்களுக்கு வியத்நாம் இருக்கு ஆப்ரிக்கா இருக்குன்னு சாட்டையால் அடிச்சது மாதிரி சொன்ன பெருமை புதுக்கவிதை களுக்குச் சேரும். சில புதுக்கவிதைங்க ரொம்ப நல்ல இருக்கு. ஆனால், சில கவிதைங்க, மட்டரகமாய், உங்ககிட்ட கூட சொல்ல