பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 111 முடியாதபடி அசிங்கமாவும் இருக்கு." "ஆனால், நம்ம நாவல்கள் தேவல. சுஜாதா ஒரு மாடர்னிட்டியை கொண்டு வந்திருக்கிறார்." "அப்படித்தான் ஒரு அபிப்ராயம் நிலவுது. ஆனால், பத்து வருஷத்துக்கு முன்னாடி இதை ரா.கி.ரங்கராஜன் செய்திருக்காரு." "எப்படியோ போகட்டும் தாமரை மணாளனின் சட்டயர்: நா.பார்த்தசாரதியின் இப்போதைய யதார்த்தவாதம்: மணிசேகரனின் சொல்வளம்; சாலியின் வர்ணனை: மணியனின் அக ஆய்வு: ஜெயகாந்தனின் தத்துவார்த்தம்: இப்படி ஒவ்வொருவர் கிட்டேயும் ஒவவொரு அழகு." "உண்மைதான். ஆனால், வேறு சில எழுத்தாளர்கள் உதவாத கருத்தை விடாப்பிடியாகப் பிடிச்சிக்கிட்டு இருக்காங்க. 'மகன், குழந்தையாய் இருக்கையிலேயே, தாயைக் காதலிக்கிறான். இதனால் தந்தைமேல் பொறாமைப்ப்டுறானாம். இதுமாதிரி மகள். தந்தையைக் காதலிச்சி, தாய் மேல் பொறாமைப்படுறாளாம். அடி, மனசில் ஏற்படும் இந்த உணர்வுகளை, கான்லியஸ் மைண்டல' ஈத்துன்னு ஒன்னு தடுக்குதாம். இதனால் மகளும், மகனும் பொறாமையை அன்பா மாத்திக்கிறாங்களாம். இதுக்கு 'ஒடிபியஸ் காம்பெளக்ஸ்'ஸின்னு பெயர்னு பிராய்ட் சொன்னாலும் சொன்னாரு நம்மவங்கள்ல சிலர் அதையே பிடிச்சிக்கிட்டு கதை எழுதுறாங்க." "நல்லா சொன்னிங்க.பிராய்ட் தத்துவமே தப்புன்னு அவருக்குப் பின்னால வந்த சைகாட்ரிஸ்ட்கள் நிரூபிச்சிட்டாங்க. ஆனால், நம்ம ஆளுங்க அதை இன்னும் விடல. என்ன எல்லாமோ எழுதுறாங்க. இதே நேரத்தில். சாமர்ஸ்ெட்மாம் ரமண ரிஷியின் தத்துவத்தை வைத்தே ஒரு நாவல் எழுதினார். அதோட தமிழில் டிராவலர்க்ஸ் அதிகமாக வரலே." "வந்திருக்கு. ஆனால், நம்மவங்க வெளிநாடுகளுக்கு தாழ்வு மனப்பான்மையோடு போயிட்டு, இங்கே வந்து இங்கிலீஸ் டிஷ்களைப் பத்தித்தான் அளந்தாங்க. சி.எஸ். லின் உலகம் சுற்றினேன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கொஞ்சம் டெக்னிக்கல்". " இந்த வகையில் மணியனின் "இதயம் பேசுகிறது" ஒரு எக்ஸலன்ட் கிரியேஷன். பிரயாணக் கட்டுரைகளுக்கு ஒரு ஸ்டேடஸ்ஸைக் கொடுத்த பெருமை, அவரைத்தான் சேரும். அவர் கட்டுரைகள் தன்மாண்மான தேசியத்தையும் மனிதாபிமான சர்வ