பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 குற்றம் பார்க்கில் தேசியத்தையும் தூண்டுது." "தமிழ் இலக்கியம் இப்போ பரவாயில்லை. டாக்டர் உதயமூர்த்தியின் கட்டுரைகள், மோகன் சுந்தரராஜனின் விண்வெளிக்கட்டுரைகள். மார்டனாய் இருக்கு. நம்ம இலக்கியம் ஒழுங்காய் உருப்படனுமுன்னா திறனாய்வு பெர்ஸனலாப் போகக் கூடாது. திறனாய்வை பெர்லனலாயும் எடுத்துக்கக் கூடாது." "என்ன எழுதி என்ன செய்ய நாடு இன்னும் அறியாமைலதான் இருக்கு. நாம எல்லாம் கஷ்டத்தை ரசிச்சிக்கிட்டு. துன்பத்த கவைச்சிக்கிட்டுத் தார்மீக கோழை களாகத்தான் இருக்கோம்." "அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒண்ணுல, ஒரு பெரிய கண்டை எடுத்து, மூணு பிரிவாக்கி, ஒரு பிரிவை வெறுமனேயும், மத்தில இருந்த பிரிவுல கொஞ்ச உணவையும் வச்சாங்களாம். நிறைய எலிகளையும் விட்டாங்க. இன்னொரு பிரிவுல, நிறைய உணவை வைச்சாங்களாம். ஒரு பிரிவுல இருந்து இன்னொரு பிரிவுக்குப் போக வழியும் வச்சாங்க. குறைந்த உணவிருந்த தட்ல இருந்த எலிகள். அங்கே சண்டை போட்டன. திருடு, ரேப்பு எல்லாம் நடந்தது. கொஞ்சம் எலிகள் அங்கே இருந்து. உணவு அதிகமாக இருக்கிற தட்டுக்கு வந்ததுங்க. ஆனால், அந்த இடம் ரசிக்கல. இருந்த இடத்துக்கே போயிட்டுதுங்க. போர், பொறாமை, திருடு ஆகியவற்றை விட்டு எலிகளால் மீள முடியல கஷ்டமே ஒரு ரசனையாயிட்டு: நாமும் அப்படித்தான் இருக்கோம்." கணேசன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சங்கரன், அவன் கல்லூரித் தோழன் மோகன் வந்ததும் அவன் வரவு பிடிக்காதவர் போல உள்ளே போனார். கணேசன் 'காரவானை'ப் புரட்டினான். மோகனின் கையில் ஒரு சினிமாப்பத்திரிகை இருந்தது. "என்னடா கனேஷ், இன்டர்விபூன்னா இப்படியா விழுந்து விழுந்து படிக்கணும்?" "இண்டர்வியூவில விழாம இருக்கனுமின்னா விழுந்து விழுந்துதான் படிக்கணும்." "சொல்றேன்னு தப்பா நினைக்காதேடா. வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணனும் 'கில் ஜாயா' இருக்கக் கூடாது. சினிமா பார்க்கறதில, அதிலும் பார்த்த சினிமாவை பழையபடி பார்க்கறதில,