பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 113 பீச்சுக்குப் போறதிலே, கேர்ல் பிரண்டோட அரட்டை அடிக்கிறதில இருக்கிற இன்பமே தனி. இது ஈடில்ல." கணேசன், "பாரதி ஓரிடத்தில்" என்றான். "நடிகை பாரதியா எதில பேட்டி கொடுத்திருக்கு?" என்றான் மோகன். "நான் மகாகவியைச் சொல்றேன். ஒரு மனுஷன், சாபத்தால் பன்றியாய் மாறினான். சாபம் விமோசனம் ஆகும்போது நான் பன்றியாவே இருக்க விரும்புறேன்னு சொல்லி, பன்றியாய் இருந்து என்ஜாய் பண்ணினானாம். பன்றி போல வாழ்ந்தனர்' என்று பாரதியார் சொல்கிறார். உன்னைப் போன்ற ஆட்கள் அப்போதும் இருந்திருக்காங்க." கணேசனின் பேச்சைக் கேட்டதும், மோகனுக்கு முதலில் ஷாக். கணேசன் முன்னால் குவிந்து கிடக்கும் புத்தகங்களைப் பார்த்ததும், தான் உண்மையிலேயே ஒரு பன்றி தான் என்று எண்ணத் தொடங்கினான். அந்த அவமானத்தில் ரீடர்ஸ் டைஜஸ்ட்டை எடுத்துக்கொண்டு, இன்றிலிருந்து படிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, வீட்டுக்குப் போனான். அங்கே அவன் தந்தை ஒரு கான்டிராக்டர். அரசியல்வாதி, பையனைப்பார்த்ததும், "ஏன்டா இடியட், அந்த இண்டர் வியூ கமிட்டியில யார் லாம் மெம்பருங்கன்னு கோமேதகம் சொல்றதா சொன்னாரே கேட்டியா?" என்றார். கனேசன் விண்ணப்பித்திருந்த அந்தப் பெரிய வேலைக்கு மோகனும் அப்ளை செய்திருந்தான். மோகன் தந்தையிடம் பேச மனமில்லாதவன் போல் "இல்லை" என்று ஒரு வார்த்தையில் முடிக்க, அவர் பல வார்த்தைகள் தொடுத்தார். "நீ கெட்ட கேட்டுக்குப் புத்தகம் வேறயா? இது நல்ல சான்ஸ், கெடுத்துடாதே. இந்த வேலை கிடைக்காட்டா உனக்கு இருக்கிற அறிவுக்கு பியூன் வேலைகூடக் கிடைக்காது. உடனே போய் மெம்பருங்க லிஸ்ட்டை கேட்டு வாங்கி என்கிட்ட கொடு. நான் அதை அந்த எம்.எல்.ஏ. கிட்ட கொடுக்கிறேன்" என்றார். "பியூன் வேலை கூடக் கிடைக்காது' என்ற உண்மை மோகனின் கையிலிருந்த ரீடர்ஸ் டைஜஸ்டை கீழே தள்ளியது. அவன் வைராக்கியம், மயான வைராக்கியமாக, மெம்பர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள தலைகால் தெரியாமல் ஓடினான். (go.urt. 3.