பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 குற்றம் பார்க்கில் இன்டர்வியூ நாள் நெருங்க நெருங்க, கணேசன் புத்தகங்களை நெருங்கினான். இந்தியன் எக்கனாமிக் பிராப்ளம், சமீபத்தில் அவசரச் சட்டங்கள் அத்தனையும் அவன் சொற்படி கேட்டன. தந்தை சங்கரனும் மகனுக்கு பாயின்ட்கள் எடுத்துக் கொடுத்தார். மோகன் வீட்டில் கார்கள் பறந்தன. பார்ட்டிகள் மிதந்தன. மோகனும், அவன் தந்தையும், ஒரு எம்.எல்.ஏ. யும் காரை வைத்துக் கொண்டே, சென்னையைச் சல்லடை போட்டார்கள். நூற்றுக் கணக்கான எம்.ஏ. பட்டதாரிகள் இன்டர் வியூவிற்கு வந்தனர். கனேசனிடம் மெம்பர்கள் முக்கால் மணி நேரம் விவாதித்தார்கள். பலரை இரண்டு மூன்று நிமிடங்களில் அனுப்பிவிட்டார்கள். இந்த லிஸ்டில் மோகன் டாப். எல்லோரும் கணேசனுக்கு அல்லது அவனை மாதிரி அதிக நேரந் தங்கிய வேறு ஒருசிலரில் ஒருவனுக்குக் கிடைக்கும் என்று தோல்வியை முன்னதாக ஒப்புக் கொண்டார்கள். ஒரு வாரம் கழித்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. மோகன் அந்தப் பெரிய வேலைக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. தன்னைவிடச் சிறந்த ஒருவனுக்குக் கிடைத்திருந்தால் கணேசன் வருத்தப்பட்டிருக்கமாட்டான். ஆள் இடிந்து விட்டான். ஒரே கவலை. ஒருவனை இல்லீகலாகத் தெரிந்தெடுப்பதை நியாயப்படுத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் நேரத்தையும் பணத்தையும் ஏன் வீணடிக்க வேண்டும் என்று ஆத்திரப்பட்டான். அவன் தந்தை சங்கரன் மகனுக்கு ஆறுதல் சொன்னார்: "இது உனக்கும் மோகனுக்கும் நடந்த போட்டியல்ல. நீ தெரிந்து வைத்திருந்த காந்திஜி, நேருஜி, டால்ஸ்டாய், தாகூர், அரவிந்தர் முதலிய மேதைகளுக்கும். அவனுக்குத் தெரிந்த அந்த எம்.எல்.ஏ.வுக்கும் நடந்த போட்டி. மேதைகள் தோற்று விட்டார்கள். கவலையை விடு."