பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 சத்தியம் கமலை அடித்துக் கொண்டிருந்த கந்தசாமி அவள் வருகிறாளா' என்று குளத்துக் கரையைப் பார்த்தான். மணி பத்துக்கு மேலாகிறது. இன்னும் அவள் ‘கஞ்சி கொண்டு வரவில்லை. இரண்டு 'செவலைக் காளைகள் நோக்கரவின் இருபுறத்திலும் கழுத்தைக் கொடுத்து 'கமலைக் கிடங்கில் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருக்க, அவன் வால் கயிற்றைப் பிடித்து லாவகமாகக் கிணற்றுத் தண்ணிரை கூனையில் ஏற்றி, பிறகு, அதே லாவகத்தோடு வடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, 'இடத்தை' மாட்டின் வாலைத் திருகிக் கொண்டு, 'வலத்தை மாட்டின் அடிவயிற்றைக் காலால் வருடிக் கொண்டே 'ம்பா. ம்பா... பய மாடு... ம்பா...' என்று சொல்லிக்கொண்டும், சாட்டைக் கம்பால் லேசாகத் தட்டிக் கொண்டும், கிடங்கில் அத்துமானம் வந்ததும், ஒரு அழுத்தத்தோடு உட்கார்ந்து, வால் கயிற்றைச் சுண்டி, தண்ணீரைக் கொட்டினான். அக்கம் பக்கத்து வயல்களிலும் இதே மாதிரி'கமலை’ அடிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. கந்தசாமி, அலுப்போடு ஒரு 'சொக்கலால் பீடியை எடுத்து, பற்றவைக்கப் போனான். அதற்குள் காத்தாயி கஞ்சிக் கலயத்தோடு வந்துவிட்டாள். அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். உழைப்பின் முத்திரையாக அவளுக்கு ஆண்டுக்கு ஒரு வயது குறைந்துகொண்டிருந்தது. சிம்மம்போல் பார்வையும், தேக்குக் கட்டைபோல உடம்பும் கொண்ட முப்பது வயது கந்தசாமிக்கு, அவள் சரியான ஜோடிதான். "என்ன பிள்ளே, கரையிலே ஆளைக் காணோம். திடீருன்னு மதுரைவீரன் மாதிரி வந்து நிக்கே?" கந்தசாமியின் நகைச்சுவைக்குக் காத்தாயி, சிரிக்காமல் கடுகடுப்பாகப் பதிலளித்தாள். "தோட்டத்து வழியா வாறேன். நேத்து மிளகாய் கொத்துக் கொத்தாய்க் கிடந்தது. எந்த இருசாதிப்பய மவனோ பறிச்சிட்டு