பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 குற்றம் பார்க்கில் போயிட்டான். தங்க நகையை தவிட்டுக்கு வித்து, பொன்னு நகையைப் பொடிப்பொடியாய் வித்து, பயிர் வச்சால் கட்டையிலே போற பய, பறிச்சிக்கிட்டுப் போயிட்டான். பேச்சியம்மா, நீதாம்மா பறிச்சவன் கையைப் படக்குன்னு ஒடிக்கணும்." 'மிளகாய்' களவு போன செய்தி, கந்தசாமியை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமலே, "யாருடி பறிச் சிருப்பா? " என்றான். "இல்லாதவன் வயது எல்லாத்துக்கும் மயனியாம்! இதுக்கு வேறே போயி சாஸ்திரம் பாக்கனுமாக்கும். ஓங்க அண்ணன்தான் பறிச்சிருப்பாரு. நேத்து அவுக வீட்ல துவையல் வாடையைப் பார்த்தபோதே எனக்குத் தெரியும். ஒங்களுக்குன்னு வாச்சிருக்காரே அண்ணாத்த, அவரு கம்மா இருந்தாலும், அவரு கையி கம்மா இருக்காதே." கந்தசாமி ஒன்றும் பேசாமல், 'கமலையை அவளிடம் கொடுத்துவிட்டு, கை காலை அலம்பிவிட்டு கமலக் கல்லில் இருந்த கலயத்தை முடியிருந்த 'கும்பாவை’ எடுத்தான். பானையில் இருந்த 'அவிச்ச அவித்திக் கீரையையும் சோளச் சோற்றையும் கும்பாவில் வைத்து, வாய்க்கால் தண்ணீரை ஊற்றி, நாலு மிளகாய்களை, முனைகளை முறித்து விட்டு, உப்பை எடுத்துக் கரைத்து விட்டு, ஒரு கவளத்தை வாயில் வைத்தான். காத்தாயி, வடத்தில் அமர்ந்து மாடுகளை "ம்பா.பய மாடு..ம்பா.நான் மாடு" என்று சொல்லிக் கொண்டே முன்னாலும் பின்னாலும் வந்தாள். "ஏ. புள்ளே உப்பு கொஞ்சம் அதிகமா கொண்டு வரக்கூடாது?" "என்மைா, வாயி நீளுது? இதுக்கு மட்டும் குறைச்ச இல்ல: அன்னனுக்கு அநியாயமா நிலத்தை அளந்து கொடுத்தி ருக்காங்கன்னு நான் நாய்மாதிரி கத்துறேன். சண்டைபோட்டு நிலத்த வாங்க துப்பு இல்ல. உப்பு வேனுமாம் உப்பு." "எங்க அண்ணன சொன்னியான்னா ஒன்வாய் அழுவிப் போகும்." "இதனால்தான் ஊரே ஒம்மப் பாத்துச் சிரிக்கிது. துப்புக் கெட்ட பிராந்தன்னு நேத்துக்கூட மாடசாமி தாத்தா சொல்றாரு. அதனால்தான் ஒம்ம அண்ணன் மிளகாயைப் பறிச்சிருக்காரு.