பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 117 இருக்கிறவன் இருக்கிறபடி இருந்தா, சிரைக்கிறவன் சரியாய் சிரைப்பாங்கறது சரிதான்." (பிராந்தன் என்ற வட்டாரமொழிக்கு, தேசீய மொழி லூஸ்') "நான் என்னடி சரியில்லாமப் போயிட்டேன்?" "உம்ம அண்ணன், நீரு சரியா இருந்தா மிளகாய் பறிப்பானா?" ( ர்' 'ன்' ஆகியது.) "அவர் பறிச்சான்னு எதை வச்சி சொல்ற?" "நான் கும்பிடுற பேச்சியம்மா கேளாம போகமாட்டா. அவன் கையில கரையான் அரிக்கும். மிளகா பறிச்ச அவன் விரல்ல வீக்கம் வராம போவாது." கந்தசாமி, அவளை உரக்கத் திட்டுவதற்காக எழுந்த போது, அவன் அண்ணன் சுப்பையா அங்கே வந்தான். வீங்கியிருந்த அவன் பெருவிரலில் விளக்கெண்ணெய் போட்டு ஒரு துணி சுத்தியிருந்தது. கந்தசாமிக்கு அண்ணனிடம் ஏதோ பேச வேண்டும் போலிருந்தது. அதற்குள் காத்தாயி முந்திவிட்டாள். "கையில என்ன மச்சான் கட்டு? வீங்கியிருக்கு?" "நேத்து ராத்திரி தோட்டத்திலே குத்துக் காலுல கையை வச்சேன். ஏதோ கடிச்சது தோணிச்சி. இதுக்குள்ள வாழைக்காய் மாதிரி வீங்கிட்டு. நீ என்னடா ஒரு மாதிரி இருக்கே? காலா காலத்தில சாப்பிடக் கூடாது?" காத்தாயி, கந்தசாமியை ஒரக்கண்ணால் பார்த்துத் திருப்தி தெரிவித்தான். "சரி நான் வாறேன். செங்கோட்டைக்குப் பாரம் ஏத்திக்கிட்டுப் போவணுமுன்னு நினைச்சேன், விரலைப் பாத்தா முடியாது போலிருக்கு. சீக்கிரம் சாப்பிட்டு கமலையை வாங்கேண்டா. பொம்பளையை எவ்வளவு நேரம் வடத்தில விடுறது? பிராந்துப் பயலுக்கு எப்பவும் அசமந்தந்தான்." சுப்பையா செல்லமாகத் திட்டிக் கொண்டே எங்கேயோ போனான். காத்தாயி, "பேச்சியம்மா, அவன் விரலு வெள்ளரிக்காய் மாதிரி வீங்கணும்" என்றாள், மச்சான் போனதும். கந்தசாமி அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினான்.