பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 குற்றம் பார்க்கில் "பார்க்கிறவ கண்ணுக்குப் பச்சையெல்லாம் பாம்பாம். அவருக்கு விரல் வீங்கிட்டா மிளகாய் பரிச்சதா ஆயிடுமா? போடி!" "இதனால்தான் ஒம்ம அண்ணங்கூட, ஒம்ம பிராந்துப் பயன்னு சொல்லிட்டுப் போறான்." காத்தாயி, தான் நேரடியாகக் கூறமுடியாததை மச்சான் மூலமாக 'பிராந்துப் பய' என்று புருசனைச் சொன்னதில், மகிழ்ந்து போனாள். கந்தசாமிக்குப் பகீரென்றது. அவள் சொல்வது மாதிரி, அண்ணனுக்கு மிளகாய் பறிச்சதால்தான், பேச்சியம்மா ஒரு வேளை பாம்பா வந்து கடிச்சிருப்பாளோ? அண்ணனுக்குப் பாம்பு கடிச்சிருக்கும் என்ற எண்ணத்தால், அவனுக்கு சகோதர பாசத்தால் பயமும், அதே நேரத்தில், அண்ணனும் தன்னை 'பிராந்துப் பய ன்னு சொன்னதால் கோபமும் ஒருங்கே வந்தன. பேச்சியம்மா காட்டிக் கொடுத்திட்டாள்! மிளகாய் பறிச்சவன், நிலத்திலேயும் ஏன் ஏமாத்தியிருக்கக் கூடாது? "நீ சொல்றதப் பாத்தா, என் அண்ணன் கிட்ட பாகத்துக்கு அதிகமான நிலமிருக்குமோ?" காத்தாயி பிடித்துக் கொண்டாள். "இதுக்குப் போயி பஞ்சாங்கம் பார்க்கனுமாக்கும். நீங்க பிராந்தன்னு அவனுக்குத் தெரியும். உங்க அய்யா மண்டையைப் போட்ட கையோடு கர்ணத்துக்குக் கையில கொடுத்து நிலத்திலே பிடிச் சிட்டான் " கந்தசாமி, ஒன்றும் பேசாமல் 'கமலையை வாங்கினான். கொஞ்ச நேரம் கழித்து, மாட்டை அவிழ்த்துவிட்டு. தண்ணீர் பார்த்த பையனை வீட்டுக்கு, மாடுங்கள பத்திக் கிட்டுப் போகும்படி சொன்னான். காத்தாயி அவனைப் பத்திக்கிட்டு, வயலுக்குள் போனாள், "பாத்தியா, பத்து மரக்கா விதப்பாட்ல நமக்கு நாலு மரக்கா தான் இருக்கும். அவனுக்கு ஆறு மரக்கா. ஒம்ம கண்ணு நல்ல கண்ணா இருந்தால் சரியாப் பார்க்கலாம்." அந்தச் சமயத்தில், கந்தசாமி வயலை உற்றுப் பார்த்தான். அவன் இப்போது 'பிராந்தன்' இல்லை. அவனை யாராலும் ஏமாற்ற