பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 119 முடியாது. நிலத்தைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே நின்றான். அப்போது காத்தாயியின் அண்ணன், அதாவது பெரிய தாத்தா பேரன் கருப்பசாமி வந்தார். அவர் 'பஞ்சபாண்டவர் வனவாசத்தை' ராகம் போட்டுப் படிப்பவர். சகுனி, அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கந்தசாமி நிலத்தை கண்ணால் அளந்து கொண்டே, "நீ சொல்றது மாதிரி இருந்தாலும் இருக்குண்டி பேசாம கர்னத்தைக் கூட்டியாந்து அளந்திட வேண்டியதுதான்" என்றான். பேசப்போன 'தங்கச்சியை கண்களால் அடக்கிவிட்டு, "மாப்பிள்ளை மச்சான். சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் சரிதான் கலகம் பிறந்தாதான் நியாயம் பிறக்கும். பாண்டவங்க கலகம் பண்ணு ைபிறகுதான் நாடு கிடைச்சுது வரப்ப வெட்டி வயலுக்குள்ள வைக்கறத விட்டுப்புட்டு, கர்னத்துக்கிட்ட போகணுமாம். ஆம்பிள பேசற பேச்சா இது?" "நான் எதுக்குச் சொல்றேன்னா..." கந்தசாமி இழுத்தான். "இதுக்குத்தான் ஒம்ம ஊர்க்காரங்க பிராந்தன்னு சொல்றாக" என்றாள் காத்தாயி. "வாயை மூடுடி!" "என் வாயை மூடலாம். ஆனால், ஊர் வாய மூட உலமுடியா இருக்கு?" "அவளை ஏன் கோபிக்கிறிய? ஊர்க்காரங்க ஒம்ம பிராந்தன்னு சொல்றதக் கேட்டு அவள் மனசு பொறுக்காம சொல்றா. ஒமக்கு ஒண்ணுன்னா அவ மனசு கேக்குமா?" அண்ணனின் பேச்சால், காத்தாயி, முதல் தடவையாகக் கணவனைப் பிராந்தன்னு சொல்றதுக்காக வருத்தப்பட்டு, அந்த வருத்தத்திற்குச் சாட்சியாகப் பொல பொலவென்று கண்ணிர் வடித்தாள். கந்தசாமிக்குக் கோபம் வந்துவிட்டது. அவனா பிராந்தன்? அண்ணன் ஏமாற்றினால், அவனா விடுவான்? 'மம்பெட்டியை எடுத்து வரப்பை வெட்டினான். காத்தாயி வெட்டப்பட்ட கற்களையும், மண்ணையும் எடுத்து மச்சான்' வயலுக்குள் சரியாக பாதி வயலில் வைத்தாள்.