பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 குற்றம் பார்க்கில் "இன்னும் கொஞ்சம் தள்ளி வை. இதில வச்சாலும் சுப்பையாவுக்குத்தான் அதிக நிலம் இருக்கும்" என்றார் கருப்பசாமி. காத்தாயி, ஒரிஜினல் எல்லைக் கோட்டிற்கு அப்பால், இரண்டு மரக்கால் விதப்பாடு 'தள்ளி வைத்தாள். ஆலோசனை கூறிய கருப்பசாமி நைலாக நழுவினார். விவகாரத்தைச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் விவகாரம் நடக்கும்போது ஸ்தலத்தில் இருக்கக் கூடாது. அப்புறம் எனக்குத் தெரியாதுன்னு சொல்ல முடியுமா? புது வரப்பும், புது வயலும் உருவாயின. அன்று சாயங்காலம், நிலத்தைப் பார்வையிட வந்த சுப்பையா மனைவி பாப்பம்மாள் "இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையா.ஆளில்லையான்னு" கத்தினாள். கந்தசாமியின் வயலுக்குள் "பேச்சியம்மா கேளு, கேளு" என்று மண்ணை அள்ளித் தட்டினாள். அக்கம் பக்கத்து வயல்காரர்கள் ஓடிவந்தார்கள் "சுப்பையா வரட்டும், விவகாரத்தைத் தீர்த்திடலாமு ன்னு பலர் சொன்னார்கள். "இப்பவே வரப்பை வெட்டிக் கந்தசாமியின் பங்கு வயலுக்கும் அப்பால் எல்லைக் கோட்டை வைக்க வேண்டும்" என்று பாப்பம்மாளின் தாய்-மாமா கத்தினார். "வாங்க மாமா, வெட்டி வைப்போம்" என்றாள் பாப்பம்மாள். தாய்மாமா, "இருட்டிட்டு...நாளைக்கு வச்சிடலாம்' என்று சொல்லிவிட்டு நழுவினார். பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. செங்கோட்டைக்குப் போன சுப்பையா, திரும்பி வந்தான். தனது நிலம் சுருங்கியது கண்டு, அவன் முகம் சுருங்கியது. நேராய்த் தம்பி வீட்டிற்குப் போனான். "ஏலே பிராந்துப் பயல எந்தப் பய பேச்சைக்கேட்டு வரப்ப வச்சேல?" என்றான் கோபமாக கந்தசாமிக்கு ஒரே கோபம் அவன் என்ன பிராந்தனா? காத்தாயியைப் பார்த்தான். அவள் அசிங்கமாக’ப் பேசுவாள் என்று நினைத்து, அவனே பதிலளித்தான். "அய்யா செத்ததும், நீ அவசரம் அவசரமாக நிலத்தப் பிரிக்கனுமுன்ன போதே, எனக்குச் சந்தேகம். ஒனக்கு ஆறு