பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கமுத்திரம் 121 மரக்கால், எனக்கு நாலு மரக்காலா?" கப்பையா, சூடானான். "ஏல, பிராந்துப் பயல கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதல." கந்தசாமி, அண்ணனைப் பார்த்து முறைத் தான். அவன் விரலைப் பார்த்தான். பேச்சியம்மாள் இன்னும் அந்த விரவில் வீக்கமாக இருந்தாள். மிளகாய் பறிச்சான். இப்போ பிராந்துப் பய என்கிறான். அவன் என்ன பிராந்தனா? கந்தசாமி, ஒரு முறைப்பை ராக்கெட்டாக்கிப் பேச்சை வெடித்தான். "அப்படித்தான் வைப்பேன். உனக்குத் தைரியமிருந்தா என்ன வேணுமுன்னாலும் பண்ணிக்க." சுப்பையா, பக்கத்தில் கிடந்த 'மம்பெட்டியை எடுத்து ஒரே போடாய்ப் போடலாமோன்னு நினைச்சான். பிறகு என்ன நினைத்தானோ, நேராகக் கர்ணத்திடம் போனான். அந்த ஊர் கர்ணத்திற்கு. அப்போது பணமுடை. எஸ்.எஸ்.எல்.சி.க்காரியான தன் மகளை, ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு வரன்' பேசிவிட்டார். அந்தப் பிள்ளையாண்டான் 'ஸ் கூட்டர் வேண்டும்' என்று உயிரை எடுத்து வருவது, அவரது 'ஆஸ்துமா கம்ப்ளைன்டை அதிகமாக்கியது. அந்த ஆஸ்துமா மூச்சில், சுப்பையாவை ஏற இறங்கப் பார்த்தார். "நீ வேறே என் உயிரை எடுக்கிறியா? மனுஷன் கல்யாணத்தை நிச்சயிச்சிட்டு அவஸ்தப்படுறான். நிலத்தை அளக்கிறதுக்கு இப்பவா நேரம்? நிலம் ஒடியா போவது? அளக்கலாம், பொறுத்து அளக்கலாம்" என்றும், சுப்பையாவை அளந்தார். "அப்படி இல்ல ஐயா. அந்த பிர்ாந்துப் பய, பெண்டாட்டி பேச்சைக் கேட்டு வரப்ப வெட்டிட்டான். விபரீதமாகப் போகுமுன்னால, ஐயாதான் வந்து அளக்கணும்." "நான் நிலத்த அளக்கிறதில நேரத்த செலவழிச்சா எனக்குப் படியளக்குறது யாரு? ஒரு கோட்டை நெல்லுக்கு எங்க கிடைக்கு @.山fT.°1。