பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 குற்றம் பார்க்கில் முன்னு தேடிக்கிட்டிருக்கேன். அது இன்னிக்குக் கிடைச்சால் நாளைக்கி வரேன். நாளைக்குக் கிடைச்சா, நாளைக் கழிச்சி வாறேன். அடுத்த மாசம் கிடைச்சால், அதுக்கு அடுத்த " சுப்பையா புரிந்து கொண்டான். இரவோடு இரவாக ஒரு கோட்டை நெல், கர்னத்தின் வீட்டில் அடைக்கலமானது. கர்ணத்தை மச்சான் மசக்குறான்' என்பதைப் புரிந்த காத்தாயி, கந்தசாமியின் முதுகில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றிவிட்டாள். பிறகு இரண்டு மூட்டை சோளத்தை ஏற்றி விட்டாள். பிறகு இருவரும் போட்டி போட்டுப் படியளந்தார்கள். கர்ணம், நகர்ந்தபாடில்லை. ஸ்கூட்டர் வாங்க. இவ்வளவு போதாது. "தாசில்தார் நாளைக்கு வர்றாரு:" நாளக் கழிச்சி வருவதாய் சொன்னார்." பிறகு, ஆர்.டி.ஓ. மீது பழியைப் போட்டார். அதற்குப் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் மீது பழி சுமத்தினார். கடைசியில் "நாளைக்கு வரேன்" என்றார்."நாளை நாளை என்னாதே' என்று சம்மாவா பாடினார்கள்? நாளை வரவே இல்லை. சுப்பையா பொறுமை இழந்தான். ஆக்கிரமிப்பை எப்படி முறியடிப்பது என்று திட்டம் போட்டான். ஊர்க்காரர்கள் எல்லாம். அவனைப் பார்த்து, கண்ணைச் சிமிட்டினார்கள். அவன் மனைவியின் சொந்தக்காரர்கள் சிலர், அவனைப் பார்த்து "இந்த உடம்ப வச்சிக்கிட்டு எதுக்குய்யா இருக்கனும் நீ?" என்றார்கள். பெண்டாட்டிக்காரி கடைசியாக இருந்த ஒரு ஆயுதத்தை பிரயோகித்தாள். "நீ ஒரு ஆம்பிளையா? இந்தப் பிராந்தங்கிட்ட இருந்து நிலத்தைப் பிடுங்க முடியல; இதுக்கு மட்டும் குறைச்சலில்ல. நிலத்தைப் பிடுங்குறதுக்கு முன்னால என்கிட்ட வரக் கூடாது. ஆம்பிளையாம், ஆம்பிளை." மனைவி இரவில் கொடுத்த அடி, சுப்பையாவுக்கு பகலிலும் வலித்தது. நேராக வயலுக்குப் போனான். அவன் மனைவி, பாப்பம்மாளும் பின்னால் போனாள். - வயலில் கந்தசாமி, 'ஏழு மரக்கால்' விதப்பாட்டிலும், எரு போட்டுக் கொண்டிருந்தான். சுப்பையாவுக்கு ரத்தம் கொதித்தது. பிராந்துப் பயலுக்குத் திமிரைப் பாரேன்! "ஏலே கந்தசாமி, கடைசியா சொல்றேன்.வயலை விடப் போறியா இல்லியா?"