பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 123 "முடியாது என்ன செய்யனுமோ செய்துக்கோ." "ஏ பிராந்தா, கேட்பார் பேச்சக் கேக்காதல!" கந்தசாமிக்கு மூக்கு முட்டக் கோபம். அவன் பிராந்தனா? "நீ ஆம்பிளையா இருந்தால் செய்யுறத செய்துக்க, நிலத்த விட முடியாது." - கந்தசாமிக்கு வயிறு முட்ட ஆத்திரம். அவன் ஆம்பிளை இல்லையா? 'மம்பட்டியை எடுத்து, வரப்பை வெட்டப் போனான்: தம்பி கந்தசாமி மம்பட்டியைப் பிடித்தான். காத்தாயியும், பாப்பம்மாளும் ஒருவர் தலைமுடியை, இன்னொருவர் பிடித்தார்கள். அவர்கள் நகராத' மாடுகளை வாலைப் பிடித்து முறுக்கி நகர வைத்தவர்கள். ஒவ்வொருத்தியும், இன்னொருத்தியின் தலைமுடியை மாட்டு வாலாக நினைத்துக் கொண்டார்கள். பெண்கள் சண்டையிடும்போது, ஆண்கள் கம்மா இருக்கலாமா? கூடாது. ஆகையால் கந்தசாமியும், சுப்பையாவும் கட்டிப் புரண்டார்கள் பயிர்கள் மேலே உருண்டார்கள். வரப்பு மேலே கட்டிப் புரண்டார்கள். பயிர்கள் மேலே அந்த நான்கு பேரும், இரண்டு இரண்டு பேராக வயல் முழுவதும் உருண்டு. அடுத்த வயலுக்கு உருளப் போனார்கள் இப்படியே போனால், எல்லா வயலிலும் பயிர்கள் பாழாகும் என்பதைப் புரிந்து கொண்ட, அக்கம் பக்கத்து ஆசாமிகள் ஓடிவந்து விலக்கு'த் தீர்த்தார்கள். அவர்கள் வந்தபிறகும் பிடியை இறுகவிடாத அண்ணன் தம்பி இருவருக்கும் 'தர்ம அடி' (பொதுமக்கள் கொடுக்கும் அடி) கொடுத்துப் பிரித்தார்கள். கந்தசாமிக்கு மூச்சு இளைத்தது. சுப்பையாவுக்குக் கை வலித்தது. அவர்களின் மனைவிமார்கள், திட்டிக் கொண்டே கட்டி உருண்டதால், அவர்களுக்கு வாய்தான் அதிகமாக வலித்தது, விவகாரம் பேசப்பட்டது. "கந்தசாமி, நீ என்ன இருந்தாலும் இவ்வளவு தூரம் வரப்பைத் தள்ளி வைக்கக் கூடாதுல ரெண்டு மரக்கால் விதப்பாட்டை எடுத்திருக்கியே" என்றார் நியாயத்தை நியாயமான