பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 குற்றம் பார்க்கில் முறையில் பேசும் ஐயாசாமி. எல்லோரும் ஆமாம் போட்டார்கள். கந்தசாமிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தெரியவேண்டிய அவசியமுமில்லை. அவன் மனைவி காத்தாயி பேசினாள். அவளுக்குப் பொய்யோ, மெய்யோ, சமயோசித அறிவு உண்டு. "என்ன தாத்தா, நியாயம் பேசுறிய நியாயம்? என் நாத்தனார் நாலு பேருக்கும். அவங்க பொண்ணுக சமஞ்சதிலிருந்து' கல்யாணம் வரைக்கும் வரவு செலவு பாத்திருக்கேன். மொத்தம் ரெண்டாயிரம் ரூவா ஆச்கது. அவரு பாதியைக் கொடுக்கணுமில்ல. கொடுத்தாரா?" "அவள் சொல்றது அநியாயம். ஒவ்வொரு விசேஷத்துக்கும் என் கையாலேயே பணம் கொடுத்தேன். வேணுமுன்னா பிராந்துப் பயகிட்ட கேட்டுப்பாருங்க" என்றான் சுப்பையா. 'பிராந்தன்' அண்ணன் கொடுத்ததுக்கு அடையாளமாக ஆமாம்' என்று தலையாட்டுவதற்காக, முகத்தைத் தூக்கிக் கீழே கொண்டு போடப் போனான். அதற்குள், மின்னல் வேகத்தில் காத்தாயி குறுக்கே புகுந்து, "பேச்சியம்மா சத்தியமா, அவரு ஒரு பைசாக் கூட பொதுச் செலவுக்குத் தரல. ஆயிரம் ரூவாயைத் தந்திரட்டும், நிலத்தை விடுறோம்" என்றாள் 'சபையில்' மனைவியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் கந்தசாமி, இப்போது அவளுக்குத் தலையை ஆட்டினான். அதுமட்டுமல்ல, எப்படியும் தூக்கிய தலையைக் கீழே கொண்டுவந்துதானே ஆகவேண்டும்? "அடி காத்தாயி நீ உருப்படுவியாடி. ஆயிரம் ருவாய்வேற அந்த மனுஷங்கிட்டே (அதாவது தன் புருஷன்கிட்ட) வாங்கிப்புட்டு இப்போ நாக்கு மேலே பல்லைப் போட்டு இல்லன்னா சொல்லுற. நீ வெள்ளச் சீலை கட்டலன்னா என் பேரு பாப்பம்மா இல்லேடி" "நீலிக்குக் கண்ணிரு நெத்தியிலேயாம். ஒன் புருஷன் எங்களப் பண்ணியிருக்கிற கொடுமைக்கு, நீங்க துள்ளத் துடிக்கப் போகலன்னா என் பேரு காத்தாயி இல்லை " ஐயாசாமி குறுக்கிட்டார். "பிச்சைக்காரத்தனமா பேசாதிய பிச்சைக்கார