பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 125 பயவுன் னியுளா...எதுக்கு இவ்வளவு சண்டை சச்சரவு? நாளைக்கி வெள்ளிக்கிழமைதான். நம்ப வீரபத்திர காளியம்மன் முன்னால சத்தியம் பண்ணிடுங்களா. அவ கேட்டுட்டுப் போறா. போன வருஷம் கள்ளச் சத்தியம் பண்ணுன காடசாமி பாம்பு கடிச்சி செத்தான். பொய் சொல்றவன் மாட்டிக்கிடுவான்." மறுநாள் வீரபத்ர காளியம்மன் முன்னால் ஊரே திரண்டது. கந்தசாமியும், கப்பையாவும் குளித்துவிட்டு ஈரத் துன்ரியோடு வந்தார்கள். காத்தாயியும், பாப்பம்மாவும் கணவன்மார்க்கு முன்னால், கேடயம் போல் நின்றார்கள். "வீரபத்திர காளியம்மன் அறிய, நான் சொல்றது. என் தம்பி கந்தையா பொதுச் செலவுக்கு செலவளிச்ச எல்லாப் பணத்திலேயும் பாதியை நான் குடுத்திட்டேன்; நான் சொல்றது பொய்யின்னா, அம்மன் என்னையோ, என்னோட பொண்டாட்டியையோ கையோட கால முடக்கலாம்." என்று சொல்லி சுப்பையா ஏற்றி வைக்கப் போகும் கர்ப்பூரத்தை "அவன் காசே தரல: நான் சொல்றது பொய்யின்னா, ளன்னையோ, என்னோட பொண்டாட்டியையோ அம்மன் கையோட காலோட முடக்கலாம்" என்று கந்தசாமி கற்பூரத்தை அனைத்துவிட்டால் போதும். ரெண்டு மரக்கா விதப்பாடோ அல்லது 'களையாய் ஆயிரம் ருவாயோ மிஞ்சும். காத்தாயிக்குப் பகீரென்றது. அம்மனிடம் 'முழுப் பூசணிக்காயை மறைக்கலாமா? கைநீட்டி வாங்கிய பணத்தைத் தரலேன்னு சொல்லலாமா? பொய் சொல்றதுக்காக குடலை உருவிடுவாளோ? கையைக் கால முடக்கிடுவாளோ? ஏற்கனவே அவளுக்குக் கை கால் உளைச்சல். ஆனால், கந்தசாமி கலங்கவில்லை. காத்தாயி சொல்லி விட்டாள். அவன் சத்தியம் செய்தே ஆகவேண்டும். சத்தியம் செய்யறதா சபதம் போட்டுட்டு, இப்போ பின்வாங்கறதுக்கு அவன் என்ன பிராந்தனா? "என் தம்பி கந்தசாமி செலவளிச்ச.." என்று சொல்லிக் கொண்டே கர்ப்பூரத்தை ஏற்றப் போனான் சுப்பையா. அதற்குள் அவன் கை நடுங்கியது. "என் தம்பி" என்ற வார்த்தை, அவனிடத்தில் சகோதர பாசத்தைக் கிளப்பி விட்டது. பிராந்துப் பயலை சின்ன வயசில் எத்தனை தடவை தோளில் தூக்கி வச்சி விளையாடி இருக்கிறான். எத்தனை தடவை, பெரிய பசங்க தம்பியை