பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 குற்றம் பார்க்கில் அடிக்கும்போது, அவன், அந்தப் பசங்களை அடிச்சி, தம்பியை சிரிக்க வச்சிருக்கிறாள். அவள் தம்பியை அடிக்கலாம். காயம் ஆறிடும். ஆனால், அம்மன் அடித்தால்? அவள், காத்தாயி, பழி பாவத்திற்கு அஞ்சாதவ கள்ளச் சத்தியம் பண்ணுற வம்சத்துல பிறந்தவ. ஆனால், அவன் வம்சம் அப்படியா? தம்பி கள்ளச் சத்தியம் பண்ணினாலும், அவன் வம்சத்துக்குத் தானே கெட்ட பேரு தம்பி அழிஞ்சாலும் அவன் அழிஞ்சாலும் ஒண்னுதானே! தம்பியை-அன்போடும் ஆசையோடும் வச்சி விளையாடு ைதம்பியைஅழிய விடுறதா? ரெண்டு மரக்கா விதப்பாடுதானே, போனால் إفاو) لاع الا3) கப்பையா கர்ப்பூரத்தை ஏற்றவில்லை. "சத்தியமும் வேண்டாம், கித்தியமும் வேண்டாம். நான் அவனுக்குக் குடுக்க வேர்ைடியது நிசந்தான்; குடுத்திடுறேன்" என்று சொல்லி விட்டு கோவிலை விட்டு வேகமாக வெளியேறிய சுப்பையாவைப் பார்த்து ஊரே சிரித்தது. அவள் தம்பி கந்தசாமி கூட, மார்பை நிமிர்த்திக் காட்டினான். காத்தாயிக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது, கப்பையாவை, யாரும் லட்சியம் செய்யவில்லை. நியாயஸ்தன் என்று நினைத்த கப்பையா, கடைசியில் ஒரு "மொள்ளமாறிதானா' அவன் மனைவி பாப்பம்மாளும் "தம்பி கிட்ட குடுக்கிறதா வாங்குன பணத்தை எவர்கிட்ட குடுத்தீரு? நீங்க ஆம்பளையா?" என்கிறாள். கப்பையா, எதற்கும் கவலைப்படவில்லை. "எக்குடி தோற்பினும் தோற்பது நின்குடியே" என்று ஒரு புலவர், மன்னன் ஒருவளிடம் ஒரு காலத்தில் கூறியது அவனுக்குத் தெரியாததுதான். ஆனால், அந்தக் கவிதைக்கு, அவன் ஒரு கருத்தாவாகி, விளக்கமாகி, ஊருக்கு விளங்காமலே நிற்கிறான்.