பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கூட்டுக் கணக்கு அந்த வட்டாரத்தில் வேலை கிடைக்காமல் திண்டாடும், அத்தனை பேரும் பிரமுகர் பிரபாகரின் வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்குப் போவார்களோ, இல்லையோ, பிரபாகரன் வீட்டுக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள். எம்.எல்.ஏக்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, பியூன் வேலைக்காக, சிபாரிசு தேடி வந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். பிரமுகர் பிரபாகரன், அவர்களுக்குத் 'தரிசனம்' கொடுப்பதற்காக, தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தார். வராந்தாவை அடுத்த அறையில் உட்கார்ந்திருந்த அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லாரையும் முன்னுக்குக் கொண்டு வர முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் குண்டுக்கட்டி வயிறு. ஸில்க் ஜிப்பா, ஜரிகை வேஷ்டியின் நீளத்துக்குப் போட்டி போட்டுத் தொங்கும் அங்கவஸ்திரம்: இவை பிரபாகரின் வெளித் தோற்றங்கள். அவர் போகாத பொதுக்கூட்டங்களோ, கலந்து கொள்ளாத கல்யாணங்களோ, பங்கேற்காத கருமாந்தரமோ இருக்க முடியாது. அழைக்காத இடங்களுக்கும், தாராளமாகப் போகும் பரந்த மனசுக்காரர். மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது தான் அவருடைய ஹாபி'. பிரபாகர் தம் கையாளைப் பார்த்துக் கையைக் காட்டினார். கையாள், வெளியே நன்கு டிரஸ் செய்திருந்த ஓர் என்ஜினீயர் பைய னையும், அவனைச் சார்ந்து வந்த இரண்டு பேரையும் உள்ளே கூட்டி வந்தான். 'என்ன விஷயம்?' என்று பிரபாகர் அவர்களிடம் கண்களால் வினவினார். "சீக்கிரமா விஷயத்தைச் சொல்லுங்க: ஐயாவுக்கு எங்கேஜ்மென்ட் இருக்கு" என்றான் கையாள். வந்தவர்களில் ஒருவர் வாய் மலர்ந்தார். "இவன் பேரு ரமேஷங்க. என்ஜினியருக்குப்