பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 குற்றம் பார்க்கில் படிச்சிருக்கான். இந்தக் கம்பெனியிலிருந்து இன்டர்வியூ வந்திருக்கு" என்று சொல்லி ஒரு தாளை நீட்டினார். பிரபாகரன் தாளைப் பார்த்தார். பிறகு முகத்தைச் களித்துக் கொண்டே, "இந்தக் காலத்தில் வேலை கிடைக்கிறது தண்ணிர் கிடைக்கிறது மாதிரி. நீங்க வேறே காரியத்துக்கு வந்திருப்பீங்கன்னு நான் நினைச்சேன்" என்றார். "அப்படிச் சொல்லக் கூடாது. ஐயாதான் தயவு வச்சு அந்த வேலையிலே இவனைத் தள்ளணும்." "கஷ்டங்க" என்ஜினியர் பையன் எழுந்து நின்று பேசினான்: "அந்தக் கம்பெனி மானேஜிங் டைரக்டர் கிட்ட நீங்க ஒரு வார்த்தை சொன்னால் போதும்." என்ஜினியர் பேசி முடிக்குமுன், ஓர் ஆசாமி திடீரென்று காட்சியாகி, பிரபாகரன் கழுத்தைத் தேடிக் கண்டுபிடித்து, கையாள் உதவியோடு ஆறடி உயரமுள்ள ஒரு மாலையைப் போட்டு விட்டு, அவருடைய இடக் கையில் ஓர் எலுமிச்சம் பழத்தையும், வலக்கையில் ஒரு பூச்செண்டையும் கொடுத்தான். பூமாலையைப் போட்டுவிட்டு பாமாலை தொடுத்தான் அவன்: "ஐயா தயவுல எனக்கு அந்த வேலை கிடைச்சுட்டுது. உங்களை நான் வேலையில் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன். நீங்க ரெகமண்ட்' பன்னாட்டா வேலை வேறு ஆளுக்குக் கிடைச் சிருக்கும்." பிரபாகர் பேசினார்: "இந்த மாலைக்குப் பதிலா ஏழைப் பையன் ஒருத்தனுக்கு ஒரு பேனா வாங்கிக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை. ஏதோ சொன்னேன்; செய்திட்டீங்க. நீ நல்ல முறையில் வேலை செய்தா, அதுதான் எனக்குப் பெருமை." "நீங்களே போகப் போகத் தெரிஞ்சுக்குவிங்க ஸார், என் வேலைத் திறமையை." Ꮮ£ ITö ❍ போட்டவன் போய்விட்டான். என்ஜினீயர் பிள்ளையாண்டான் அஸ்திவாரம்' போட்டான்.