பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 129 "லார், நீங்க மனசு வச்சா எனக்கு வேலை கிடைக்கும். உங்க வாயிலிருந்து வர்ற ஒரு வார்த்தையில என் எதிர்காலமே இருக்கு." பிரபாகர் லேசாகச் சிரித்தார். பிறகு அந்தப் பையனைப் பார்த்து, "என்ன படிச்சிருக்கே, அப்பா?" என்றார். "பி. ஈ. பஸ்ட் கிளாஸ் ஸ்ார்." "ஏதாவது முன் அனுபவம் இருக்கிறதா?" "என் மாமா கட்ற வீட்டுக்கு ஐடியா கொடுத்தது நான்தான். "ரெபரன்ஸ், அதாவது, உனக்கு எந்தப் பெரிய மனிதரையாவது தெரியுமா?" பிரபாகர், கையாளைப் பார்த்து மானேஜிங் டைரக்டருக்குப் போன் போடச் சொன்னார். கையாள் நீட்டிய ரிலீவரில் பேசினார். "ஹலோ, நான்தான் பிரபாகரன் பேசுகிறேன். ஹா...ஹா... அப்படில்லாம் ஒன்னுமில்லே. ஹா.ஹா....என்ன? நேத்து என் வீட்டுக்கு வந்தீங்களா? ஐ ஆம் சாரி. நான் லயன்ஸ் கிளப்ல பேசப் போயிருந்தேன். அப்புறம், ஐ ஆம் இண்டரஸ்ட்டெட் இன் ஏ கேண்டிடேட்.பேரு என்னப்பா?" "ரமேஷ் லார்." "ஆமாம். ரமேஷ்.லார்.நோ. வெறும் ரமேஷ் இல்லே. பி.ஏ. படிச்சிருக்கான்." “ L}. श. c{\yा # , “ "ஐ ஆம் ஸாரி. பி.ஈ. படிச்சிருக்கான். ஒங்க கம்பெனியிலே இண்டர்வியூ வந்திருக்கு. பாத்துக்குங்க. என்ன? அப்படியா? ஐ.லி. எதுக்கும் டிரை பண்ணுங்க. நாளைக்கு வேண்டாம். எனக்கு சி. எம்மோட டின்னர் இருக்கு. ஹா. ஹா...ஒகே நான் சொன்னதைக் கவனிச்சுக்கங்க. ஒகே." பிரபாகர் போனை வைத்துவிட்டு, "கஷடமாம்" என்றார். "அப்படிச் சொல்லக்கூடாது. ஐயா மனசு வைக்கனும். நீங்க மனசு வச்சா நடக்காதது இல்லே." "இந்தக் காலத்துல எல்லாப் பயலும் துட்டுக் கேக்கறான்."